பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நெஞ்சுக்கு நீதி ஒரு லட்சம் ஏக்கரா பரம்பிக்குளம் ஆளியாறு பகுதியில் பாசன வசதி பெறும்;ஆனைமலையாறு மூலம் கிடைக்கும் நீரால் வறண்ட பகுதிகளில் சுமார் இருபதாயிரம் ஏக்கர் சாகுபடியாகும். கோவை நகருக்கு சிறுவாணி மூலம் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஒப்பந்தம் பயன்படுகிறது. மின்சார உற்பத்தியும் இந்த ஒப்பந்தம் மூலம் அதிகரிக்கும். பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட பிரச்சினைக்கு வெற்றிகரமான முடிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னின்று நடத்திய மத்திய அமைச்சர் ராவ் அவர்கட்கும் தமிழக, கேரள அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்கும், கேரள முதல்வர் ஈ.எம். எஸ். நம்பூதிரிபாத் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நல்ல எண்ணத்துடன் திரு. சி. சுப்பிரமணியம் முயற்சியால் தொடங் கப்பட்ட திட்டம் எங்களால் பூரணத்துவம் பெற்றதில் தனி மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தார் அண்ணா; அதை நாங்கள் முடித்து வைத்ததில் ஒரு உணர்ச்சிமயமான பூரிப்பு ஏற்படுகிறது" என்று கூறினேன். பரம்பிக்குளம் ஆளியாறு நதி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் குறித்து என்னையும், கேரள முதல்வரையும் பாராட்டிய மத்திய அமைச்சர் கே. எல். ராவ் அவர்கள், "மாநிலங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதில் இவர்கள் இந்தியாவுக்கே வழி காட்டுகிறார்கள்” என்று கூறினார். சென்னையில் 11-5-69 அன்று தமிழரசுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இந்த ஒப்பந்தம் பற்றி "புராணத்திலே பகீரதன் தவம் செய்து ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான் என்று கதையுண்டு. ஆளியாறு தண்ணீரைத் தமிழகத் திற்குக் கொண்டு வரத் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேரள அரசோடு ஒப்பந்தம் செய்திருப்பது, நமது முதல்வரின் செயல் திறமைக்குச் சிறந்த சான்று. தமிழகத்திலும் கேரளத் திலும் காங்கிரசே அரசுக் கட்டிலில் இருந்த காலத்திலும் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகவில்லை. மாறாக இரண்டு மாநிலங்