பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 137 அதையடுத்து எங்களை மற்றொரு கவலை பிடித்துக் கொண்டது. அவருக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைமை என்ன வாகுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்த நாட்டிலிருந்து அமெரிக்கா வருகிற விஞ்ஞானிகள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் அனைவரிடமும் நாங்கள் தமிழ்நாட். டின் முன்னேற்றம் அண்ணாவிற்குப் பிறகு எப்படி இருக்கிறது என்று கேட்போம். அதற்கு அவர்கள், அந்தக் கவலையை விடுங்கள்; கலைஞரது தலைமையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்று எல்லோரும் ஒரே குரலாகச் சொல்வதைக் கேட்டு நாங்கள் மகிழ்வோம்.' கேரள மாநிலத்து அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்துக்கொண்டு எல்லா சார்பு மக்களின் இதயத் திலும் பதிந்துவிட்ட பெயர்களில் ஒன்று முகமது கோய. அவர் அப்போது கேரளத்து கல்வி அமைச்சராக இருந்தார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையும் குறிப்பிடத்தக்கது. அது வருமாறு: என் அவர் ஆற்றிய "திரு. கருணாநிதி ஒரு கலைஞர், ஒரு இலக்கியவாதி, ஒரு கவிஞர். அவரை அரசாங்க தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பதவி என்ற சிறைச்சாலையில் அடைத்திருக்கிறீர் கள். கருணாநிதியைப் போன்ற ஒரு கலைஞருக்கு இது எத்தனை சங்கடமானது தெரியுமா? "பைல்" களுக்கிடையிலேயும் அரசாங்க அலுவல்களில் சிகப்புநாடா முறைகளுக்கிடையிலேயும் பல ஆண்டு காலம் கழித்தால் அவருக்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். கலைஞர் முதலமைச்ச ராக ஆனது தமிழக அரசுக்கு லாபம்; ஆனால் தமிழக இலக்கிய உலகிற்கு நஷ்டம். ஏழை மக்கள்; கட்டியிருக்கிற ஆடைக்கும் மாற்று ஆடையின்றி அவதிப்படுகிற குடிசை வாழ் மக்களுக் கெல்லாம் நான் ஒன்றைச் சொல்வேன். உங்களுக்கென்று ஒருவர் அரசோச்சுகின்ற இடத்திற்கு வந்திருக்கிறார். அண்ணாவின் வலக்கரமாக விளங்கிய அவர் இன்று அண்ணாவின் இடத்தில் இருக்கிறார் என்ற திருப்தியோடு இருங்கள். கலைஞருக்கு என்று ஒரு தனி பாணி உண்டு. இலக் கியத்திலும் அவர் அப்படித்தான். எந்த ஒரு எழுத்துப் பாணியை யும் பின்பற்றாமல் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் காட்டியவர் அவர். எதற்காக அவரைப் பாராட்டுவது என்று தெரியாமல் திகைக்கிறேன்.