பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 139 82-83-ஆம் ஆண்டு முடிய சுமார் 13,000 ரூபாய் தரப்பட்டிருக் கிறது. ஆக, அந்த அறக்கட்டளையின் மொத்தத் தொகைக்குக் கிடைத்த வட்டியின் மூலமாக இதுவரை மாணவர்களுக்கென சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பட்டுள்ளது. வழங்கப் முன்னால் மேயர் நண்பர் சா. கணேசன் அவர்களுடைய முயற்சியால் 1972-இல் என் பெயரால் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஐம்பது ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வட்டியாக வருகின்ற சுமார் ஐம்பதாயிரம் ரூபாயைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு காசோலையாகவே இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. என் பிறந்த நாள் விழா எதுவாயினும் அந்த நிகழச்சிகளில் அளிக்கப்படுகிற தொகை ஏழைகளுக்காகவே செலவிடப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கண்ணொளி வழங்கும் திட்டம் பிச்சைக்கார மறுவாழ்வுத் திட்டம், மாடுகளைப் போல் மனிதர்கள் இழுத்த கைரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு இலவசமாக அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கிய திட்டம், ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம், அனாதைச் சிறுவர் களுக்கு கருணை இல்லங்கள் நடத்தி கல்விப் பயிற்சியும், உணவும் உறையுளும் அளிக்கும் திட்டம் போன்ற எல்லாச் செயல்களுமே ஏழை எளியோரை முன்வைத்து நிறைவேற்றப் பட்ட திட்டங்களாகும். ஐ என் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அடுத்த இரண்டு நாட் களுக்குப் பிறகு ஜூன் திங்கள் 5-ஆம் நாள் சென்னையில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூடியது. அந்தச் செயற் குழுவில் காமராஜர் அவர்களின் குழுவிற்கும், சுப்பிரமணியம் அவர்களின் குழுவிற்கும் மனத்திற்குள் இருந்த வெறுப்பு வெளிப் படையாக வெடிக்கத் தொடங்கிற்று. அந்தச் செயற்குழு கூட்டப்பட்டதின் முக்கிய காரணமே பொள்ளாச்சி மகாலிங்கம் விவகாரம் பற்றி விவாதிப்பதற்காகத் தான். அந்த விவகாரம் என்னவென்றால் திரு. காமராஜர் அவர் கள் ஒரு கூட்டத்தில் அப்போது பேசும்போது; பொள்ளாச்சி மகாலிங்கம் நடத்திய விழா ஒன்றில் தி.மு.கழக அமைச்சர் களுக்கு மது வகையறாக்கள் பரிமாறப்பட்டன எனக் குறிப் பிட்டார்.