பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 146 எம்.ஜி.ஆர். அளித்த பதிலில், "தி.மு. கழகத்தில் உள்ள 99 சதவிகிதம் பேர்கள் கலைஞர் அவர்கள்தான் பொதுச் செயலாள ராக வரவேண்டுமென்று விரும்புகிறார்கள். எனவே அவரைத் தேர்தலில் நிற்கவேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். இனிமேல் அந்தப் போட்டியிலிருந்து விலகுவது என்பதுகூட கலைஞர் கையில் இல்லை. தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் தன்னுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டு மென்று நாவலர் சொல்வது அவர்களைக் கட்டாயப்படுத்துவ தாகத்தான் ஆகும். கட்சியின் தலைமை ஒருவரிடமும், ஆட்சி யின் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் சீர்குலைந்தது. அந்த நிலை தி.மு. கழகத் திற்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இரண்டு பதவி களையும் ஒருவரே வகிக்கவேண்டுமென்று நான் கூறுகிறேன் என்று குறிப்பிட்டார். 39 நிருபர்கள் எம். ஜி. ஆரைப் பார்த்து, நெடுஞ்செழியன் கருணாநிதி இருவரின் போட்டியைத் தவிர்க்க நீங்கள் சமரச முயற்சி எதுவும் மேற்கொள்வீர்களா? எனக் கேட்டனர். அதற்கு எம். ஜி. ஆர். "ஒரு பிரச்சினையில் முடிவு ஏற்படாத தற்கு முன்னால்தான் மத்தியஸ்தம் பேசுவார்கள், இந்தப் பிரச்சினை யைப் பொறுத்தவரையில் ஒரு முடிவு ஏற்பட்டு, இரண்டுபேருமே தேர்தல் களத்தில் குதித்துவிட்டார்கள். இதில் சமரச முயற்சிக்கு எதுவும் இடம் இல்லை" என்று கூறினார். பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து தந்தை பெரியார் விடுத்த அறிக்கையில் "தி. மு. கழகத்தில் பொதுச்செயலாளர் பதவிதான், கட்சியின் தலைமைப் பதவி. இந்தப் பதவிக்கு கருணாநிதி போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். ஆகவே அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சியின் தலைமைப் பதவியும், ஆட்சியின் தலைமைப் பதவியும் ஒருவர் கையில் இருந்தால்தான் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் எடுத்த காரியங்கள் நடக்கும். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தபோது கட்சியைத் தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருந் தார். பொதுச்செயலாளர் பதவிக்கு நெடுஞ்செழியனும் போட்டி யிடப் போவதாக அறிவித்திருக்கிறார். கட்சித் தலைமைப் பதவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். போட்டியிருந் தால் அது கட்சிக்குப் பலவீனம்" என்று குறிப்பிட்டிருந்தார்.