பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நெஞ்சுக்கு நீதி . கு ரியதாக்குவதை விட தேதிவாரியாக வந்த செய்திகளைத் தொகுத்துத் தந்தாலே - அவற்றைப் படிப்பவர்கள்; யார் யார் எப்படிப்பட்ட மாற்று நிலைகளை மேற்கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இயலும். அந்த ஆண்டு மே மாத இறுதியில் ராஜாஜி அவர்கள், "சுயராஜ்யா" பத்திரிகையில், "ஓய்வு பெறும் இராணுவத் தளபதி குமார மங்கலம் அவர்களை ஜனாதிபதியாக்கலாம்" என்று எழுதினார். ஜூன் 6-ந்தேதி வெளிவந்த ஏடுகளின் செய்தியின்படி ; "எல்லாக் கட்சிகளும் கருத்து ஒற்றுமையுடன் ஒரு வேட்பாள ரைத் தேர்ந்தெடுக்க முடியும்" என்று பிரதமர் இந்திராகாந்தி நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஜூன் முதன் வாரத்தில் "சுயராஜ்யா" இதழில் ராஜாஜி அவர்களின் கட்டுரை, பின்வருமாறு கருத்தை வழங்கியது. "வி.வி.கிரி அவர்கள், நற்குணங்களும் திறமையும் நிரம்பியவர். 1937-ல் சென்னை மாகாணத்தில் நான் பிரதமராக இருந்தபோது அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்திருக் கிறார். அப்போது முதலே அவர் சிறந்த உறுதியான காங்கிரஸ் காரராக இருந்து வருபவர். தொடர்ந்தும் அப்படியே இருப்பார். அதனால்தான் அவர் ஜனாதிபதி ஆவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் ராஷ்டிரபதியாகக் கூடாது. அரசியல் கட்சிச் சார்பற்றவரையே அப்பதவியில் அமர்த்த வேண்டும். பிரதமரும் அதையே விரும்பு வார் என்று கருதுகிறேன். ஆளும் கட்சிக்கு ஆமாம் போடு வதைத் தமது கடமையாகக் கருதாமல் பிரச்சினைகள் தோன்றும் போது சுயமாகச் சிந்தித்து துணிவாக அதைக் கூறுபவரையே ஜனாதிபதியாக ஆக்க வேண்டும்." 2 இதற்குப் பிறகு 19 -6-69 ஏடுகளில் வெளிவந்த செய்தி குறிப்பிடத்தக்கது. 'ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளரைப் பொறுக்குவது சம்பந்தமாக பிரதம மந்திரி இந்திராவின் ஆதரவாளர்களுக்கும், சிண்டிகேட் உறுப்பினர்களுக்குமிடையே மோதுதல்; தவிர்க்க முடியாதது எனத் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் இதுவரையில் திட்டவட்டமான முடிவு எதற்கும் வரவில்லை. வேட்பாளரைப் பொறுக்குவதில் சங்கடம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இதில் பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்குமிடையே கருத்து