பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 155 வேறுபாடு நிலவுவதுதான்! புதிய ஜனாதிபதி பதவிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்துப் பிரதமர் இந்திரா காந்தி, இன்று காலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி யுடன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது. அது குறித்து தொலைபேசியில் விபரம் அறியக் கேட்டபோது கருணாநிதி அவர்கள் கருத்து எதுவும் இப்போது பத்திரிகைகளுக்குக் கூற இயலாது என மறுத்துவிட்டார். இதனையடுத்து வந்த செய்தியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. நிஜலிங்கப்பா அவர்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினார் என்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாள ராகக் கருதப்படும் சபாநாயகர் சபாநாயகர் சஞ்சீவ ரெட்டி சஞ்சீவ ரெட்டி அவர்களும் பிரதமருடன் பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டது 23-6-69 வெளிவந்த ஏடுகளில்! ஜூலை 10, 11, 12 ஆகிய தேதிகளில் பெங்களுரில் அகில இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்கள் கூடியபோதுதான்; சூல் கொண்டிருந்த பூசலெனும் புயல், கரை நோக்கிக் கிளம் பிற்று எனக் கூறலாம். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மா னிக்கவும் கட்சியின் பல்வேறு பணிகளை ஆராய்ந்திடவும் என்ற பெயரால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழுவும், காரியக் கமிட்டியும் பெங்களூரில் கூட்டப்பெற்றன. அங்கு நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு (மத்திய பார்லி மெண்டரி போர்டு) கூட்டத்தைப் பற்றி ஜூலை 13-ந் தேதி ஏடு களில் செய்திகள் பரபரப்பாக வெளியிடப்பட்டன. “குழுக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தலைமை தாங்கினார். மேலிடக் குழு உறுப்பினர்களான பிரதமர் இந்திராகாந்தி, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய், சவான், காமராஜர், பட்டீல், ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது ஆகியோர் கலந்து கொண்டார்கள். உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராமை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டுமென பிரதமர் இந்திராகாந்தி கூறினார். சபாநாயகர் சஞ்சீவ ரெட்டியை நிறுத்தவேண்டுமென மற் றொரு கருத்தும் குழுவில் கூறப்பட்டது. ஒருமனதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதால் ஓட்டெடுப்பு நடை பெற்றது. சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தவேண்டு மென; மொரார்ஜிதேசாய், சவான், காமராஜர், பட்டீல் ஆகிய நால் வரும் வாக்களித்தனர்.