பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 ஆச்சரியம் காத்திருந்தது! ஐனாதிபதி தேர்தலில் வி.வி. கிரி போட்டியிடப் போகிற செய்தி கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் என்று நிருபர்களிடம் கூறிய பிரதமர் இந்திரா காந்தி பொதுவாக ஜனாதிபதி தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவை வர வேற்க இயலாத சூழ்நிலையில் இருந்தார் என்பதையும் அந்தப் பேட்டியின் மூலம் சூசகமாக அறிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சஞ்சீவ ரெட்டி போட்டியிடுவதைத் தான் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் வேட்பாளராக நிற்க விரும்பாத ஜெகஜீவன்ராம் பெயரை தான் முன்மொழிந்ததாகவும், அதை காங்கிரஸ் கட்சியிலே உள்ள மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலிடக் கூட்டத்தில் பெங்களுரில் வி. வி. கிரி பெயரைத்தான் முதலில் தெரிவித்தேன் என்றும், அதை மற்றவர்கள் ஏற்காததால் அடுத்து ஜெகஜீவன்ராம் பெயரைக் கூறினேன் என்றும் பிரதமர் சொன்னார். சஞ்சீவரெட்டி வெற்றி பெறுவதற்காக முழு மனதோடு முயற்சி செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது மெளனமாக இந்திரா காந்தி அவர்கள் பதில் அளிக்காமல் இருந்துவிட்டார். அவரை ஆதரித்து வாக்களிக்கும்படி வேண்டு கோள் விடுப்பீர்களா என்று கேட்டதற்கு அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எழுந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு மிக முக்கியமானதாக ஆயிற்று. நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் அளிக்கின்ற வாக்குகளைப் பொறுத்தே அந்தத் தேர்தலுடைய வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடிய நிலைமை அப்போதிருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த என்னை நிருபர்கள் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜெகஜீவன்ராம் நிறுத்தப்படவில்லையே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் அந்த முடிவு பெரும் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றும்.