பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 161 இதற்கிடையே ஜூலை 18-ந் தேதி அன்று இந்திரா காந்தி யும் மொரார்ஜியும் சந்தித்துப் பேசினார்கள். அந்தச் சந்திப்பின் விளைவாக எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பிறகு டெல்லியில் நிஜலிங்கப்பா அவர்களின் வீட்டில் மொரார்ஜி, காமராஜர், நிஜலிங்கப்பா மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு அன்று இரவு 8 மணி அளவில் இந்திரா காந்தியை நிஜலிங்கப்பா சந்தித்தார். நிதி இலாகாவை மீண்டும் தேசாயிடம் கொடுத்து விடும்படி நிஜலிங்கப்பா கேட்டுக்கொண்டார் என்றும் அதைத் திட்டவட்டமாக மறுத்த இந்திரா காந்தி அவர்கள் வங்கிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப் பட்ட பெங்களுர் மாநாட்டுப் பொருளாதாரக் கொள்கை பற்றிய தீர்மானத்தைச் செயல்படுத்துவதென்றால் நிதி இலாகா பிரத மரிடம் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்திரா கூறிய தாகவும், எனவே சமரசப் பேச்சு முறிந்துவிட்டதாகவும் செய்தி கள் வெளிவந்தன. அதே நாளில் பெங்களூர் வந்திருந்த சஞ்சீவ ரெட்டி அவர் கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது "ஜனாதிபதி தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டால் கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்வேன்" என்று கூறினார். "வேட்புமனுவை எப்போது தாக்கல் செய்வீர்கள்" என்று கேட்ட தற்கு "மனுவை நான் தாக்கல் செய்ய மாட்டேன். எனது மனுவை பிரதமரே தாக்கல் செய்வார். எனக்கு ஆதரவு கொடுக்க பிரதமர் இந்திரா காந்தி முன்வந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். இது நிருபர்களை மாத்திரமல்ல; நாட்டு மக்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஜூலை 19-ந் தேதி டெல்லியில் மத்திய அமைச்சரவை அவசரமாகக் கூடி வங்கிகளைத் தேசியமயமாக்குவது பற்றி ஆலோசனை நடத்தியது. பொது மக்கள் போட்ட டெபாசிட் தொகை ஐம்பது கோடிக்கு மேல் உள்ள பதினான்கு பெரிய வங்கிகளை அரசு ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற் குரிய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த அவசர சட்டத்தில் தற்காலிக ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி கையெழுத்திட்டார்.