பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நெஞ்சுக்கு நீதி நான் முதலமைச்சரானவுடன் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு (என். டி. சி) கூட்டத்தில் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசினேன். அது வடநாட்டு ஆங்கில ஏடுகளிலும், தமிழகத்து ஏடுகளிலும் அப்போது பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டு பிரசுரிக் கப்பட்டது. எனது கருத்தை தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் உதவிப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் மறுத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அப்போது மௌனமாக இருந்தார்கள் என்றாலும் சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய தலைமையில் கூடிய அமைச்சுவையில் வங்கிகளை தேசியமயமாக்கும் முற்போக்குக் கருத்து அவசரச் சட்டமாக வெளியிடப்பட முடிவெடுக்கப் பட்டது. எனவே அந்த அவசரச் சட்டத்தை நான் வரவேற்று இது போன்று முற்போக்குக் கொள்கைகள் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் பொழுது அதன் வெற்றிக்கு தமிழக அரசும், தி.மு.கழகமும் என்றென்றும் துணை நிற்கும் என்று அறிக்கை விடுத்தேன் ஜூ 19 -ஆம் நாள் மக்கள் அவைத் தலைவராக இருந்த சஞ்சீவரெட்டி அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற் காக தனது அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அன்றைக்கே உதவி ஜனாதிபதி பதவியை வி வி. கிரி அவர்களும் ராஜினாமா செய்தார். அதே நாளில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தை பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் துவிவேதி கூட்டினார். அதில் கிரந்திதளக் கட்சியைச் சேர்ந்த சரண்சிங், ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மசானி, சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், அகாலி தளத்தைச் சேர்ந்த பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்றும், தேர்தலில் வேட்பாளராக சி. டி. தேஷ்முக் அவர்களை நிறுத்தலாம் என்று சுதந்திரா, கிரந்தி தளக் கட்சித் தலைவர்கள் கூறினார்கள் என்றும் தமிழ்நாடு முதலமைச்சராகிய என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தலாம் என்று அந்தக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது என்றும், ஆயினும் யாருடைய பெயரும் இறுதியாக முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜூலை 22-ஆம் தேதி நான் டெல்லி வந்த பிறகு