பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி189 என்னுடன் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப் பட்டது என்றும் ஏடுகளில் செய்திகள் வெளிவந்தன. ஜூலை 21-ஆம் நாள் நண்பர்கள் கந்தப்பன், ராஜாராம் ஆகியோருடனும், முரசொலி மாறனுடனும் நான் டெல்லியை அடைந்தேன். அன்று மாலை டெல்லியில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு திரு. ம சானி, திரு. த ண் டே க ர், திரு.ஏ.கே.கோபாலன், திரு. பி. ராமமூர்த்தி ஆகியோர் என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். மாளிகையில் அதற்குப் பிறகு நிருபர்கள் என்னிடம் வந்து கேட்டபோது தேஷ்முக்கை நிறுத்த வேண்டுமென்று சுதந்திரா கட்சி கூறுகிறது என்பதையும், வி. வி. கிரியை ஆதரிக்கலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி கருத்து அறிவித்திருப்பதையும் இது குறித்து முடிவு செய்ய இன்னும் இரண்டொரு நாட்களாகும் என்பதையும் நான் நிருபர் களுக்கு விளக்கினேன். "உங்கள் செய்யப்பட்டிருக்கிறதே" பெயரும் ஜனாதிபதி தேர்தலுக்கு சிபாரிசு என் று நிருபர்கள் கேட்டபோது நான் அவர்களிடம் “அப்படி ஒரு எண்ணம் எனக்கு அரும்பவே இல்லை" என திட்டவட்டமாக மறுத்தேன். அதற்குப் பிறகு 21, 22 ஆகிய இரண்டு நாட்களிலும் பூபேஷ் குப்தா, வாஜ்பாய், கோரே, துவிவேதி, நாத்பாய், மதுலிமாயி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மேற்கு வங்க முதலமைச்சர் அஜாய் முகர்ஜி, துணை முதல்வர் ஜோதிபாசு, பஞ்சாப் முதலமைச்சர் குர்நாம் சிங், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத், வி. கே. கிருஷ்ணமேனன் ஆகியோர் என்னைச் சந்தித்துத் தேர்தல் பற்றிக் கலந்துரையாடினார்கள். பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் என்னிடம் உரையாடிய நாத்பாய் போன்ற தலைவர்கள் என்னையே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்கள். நான் அவர்களிடம் "தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களோடு நெருங்கியிருந்து ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக் கின்றன" எனக் கூறி அவர்களுடைய விருப்பத்தை நிராகரித் தேன். "ஜனாதிபதி தேர்தலில் ஏகமனதாக ஒருவரைத் தேர்ந் தெடுக்க ஏதாவது ஒரு வழி உங்களுக்குத் தோன்றுகிறதா?" என்று நிருபர்கள் என்னைக் கேட்டபோது, "ஜெயப்பிரகாஷ்