பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 நெஞ்சுக்கு நீதி பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் களுக்கு சஞ்சீவ ரெட்டிக்கு வாக்களிக்குமாறு கடிதம் எழுத வேண்டுமென யோசனை தெரிவிக்கப்பட்டது. யோசனையை ஏற்க இந்திரா காந்தி மறுத்து விட்டார். அவர்கள் அந்த கூட, சஞ்சீவ ரெட்டி அவர்களை பிரதமர் இந்திரா காந்தி வேட்பாளராக முன்மொழிந்திருந்தாலும் அவரது வெற்றி தனிப்பட்ட முறையில் தன்னைப் பெரிதும் பாதிக்கும் என்று கருதினார். அந்தத் தேர்தல் முடிவு வி.வி.கிரி அவர்களுக்குப் பாதகமாக இருந்தால் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் கை ஓங்கிவிடும், அதன் காரணமாக இந்திரா காந்தி பதவியிலிருந்து இறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் திடமாக நம்பின. அந்தக் காரணத்தினால் பிரதமர் இந்திரா அவர்கள் முரண்பட்ட ஒரு நிலையை மறைமுகமாக எடுக்க நேர்ந்தது. என்னைச் எவ்வாறு ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று வேட்பாளர் வி. வி. கிரி அவர்கள் சென்னைக்கு வந்து எனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். வெற்றி வாய்ப்பு சூழ்நிலை உள்ளது என்பது குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித் தோம். கழகம் தனது ஆதரவை அவருக்குத்தர முன்வந்ததால் அவரது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று தனது நன்றியை அவர் முன்கூட்டியே அறிவித்தார். அவர் இந்தியா முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 6-ஆம் தேதி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டம் மீண்டும் மீண்டும் டெல்லியில் கூடியது. அதில் பிரதமர் இந்திரா காந்தி எடுத்துள்ள இரட்டை நிலை குறித்து காரசாரமான விவாதங்கள் எழுந்தன. திருமதி தாரகேஸ்வரி சின்கா என்ற பிரபல காங்கிரஸ் காங்கிரஸ் உறுப்பினர் இந்திராகாந்தியிடம் நேரடியாகவே மோதினார். அதன் காரணமாக இரு தரப்பிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குழப்பம் ஓரளவு அடங்கிய பிறகு அந்தக் கூட்டத்தில் இந்திராகாந்தி பேசும் போது "காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா மீது பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி முழு நம்பிக்கை வைத்திருக்கிறது; ஜனாதிபதி தேர்தல் பற்றிப் பல கதைகள் கட்டிவிடப்படலாம்; ஆனால் கட்சியின் முடிவுப்படி சஞ்சீவ ரெட்டியையே நான் ஆதரிக் கிறேன். இதை முன்பும் சொல்லியிருக்கிறேன்" குறிப்பிட்டார். என்று