பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நெஞ்சுக்கு நீதி தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமும் கிடைத்த வாக்குகளின் மதிப்பு 35, 448. இதில் 20,448 மதிப்புள்ள வாக்குகள் சட்டமன்றத்தின் மூலமும், 15,000 மதிப்புள்ள வாக்குகள் நாடாளு மன்றத்தின் மூலமும் வி. வி. கிரி அவர்களுக்குக் கிடைத்தன. அந்த வாக்குகளைக் கழித்துப் பார்த்தால் வி. வி. கிரி அவர்கள் தோல்வி அடைந்து சஞ்சீவ ரெட்டி அவர்கள்தான் வெற்றி பெற்றிருக்க முடியும். கிரி அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து நான் வெளி யிட்ட அறிக்கையில் "கழகச் செயற்குழுவின் கட்டளையை ஏற்று டெல்லி சென்று எல்லா கட்சித் தலைவர்களையும் கலந்து பேசி ஆரம்பத்தில் நான் எடுத்த முயற்சி, அனைத்துக் கட்சியினரும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு வெற்றி பெற்றிருக்கிறது. நீண்ட காலமாக தொழிற் சங்க இயக்கங்களிலும் பொது வாழ் விலும் ஈடுபட்டு வருகிற கிரி அவர்களின் கொள்கிறேன்” வெற்றிக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் தொண்டாற்றி என்று குறிப்பிட்டிருந்தேன். தி.மு. கழகம் இந்தத் தேர்தலில் வேறு நிலையை எடுத்திருந் தால் அது வி. வி. கிரியின் தோல்வியாக மாத்திரம் அமையாமல் பிரதமர் இந்திரா காந்தியின் வீழ்ச்சியாக முடிந்திருக்கும்!