பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 23 பக்தவத்சலனார் பாராட்டு ‘நிலா நிலா ஓடி வா!" என்று குழந்தைகளுக்குப் பாடிக்காட்டி மகிழ வைக்கவும், "கோல நிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில் காதலோடு நாம் களித்திருப்போம் எனப் பேசி காதலர்கள் குலவிடவும், வானத்தில் வளர்ந்தும் தேய்ந்தும் அழகு காட்டிக் கொண்டிருக்கும் சந்திரன் பரம் சிவனின் ஜடாமுடியில் வீற்றிருக்கிறான் என்று புராணீகர்கள் கூறுவர். அந்தச் சந்திரனையும், சூரியனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதால்-அப்படி விழுங்கப்படும் நேரத்தில் கிரகணம் காணப்படுகிறது என்றும் கதைகள் கட்டியுள்ளனர். போல ஆனால் விஞ்ஞானப் புதுமையில் சந்திரனும் பூமியைப் விண்வெளியில் ஒருகிரகமே என்று உறுதிப்படுத்தப் பட்டது மாத்திரமல்ல, அந்தக் கிரகத்திற்கே பயணம் செய்து அதில் காலடி எடுத்து வைத்துவிட்டு மனிதன் திரும்பி வரவும் முடியும் என்ற அற்புதத்தை விளைவித்த ஆண்டு 1969 ஆகும். அந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி இரவுதான் அமெரிக்காவிலே உள்ள கென்னடி முனையிலேயிருந்து சந்திரனுக்குச் செல்ல மனிதன் புறப்பட்டான். பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு இரண்டரை லட்சம் மைல் களாகும். அங்கே செல்வதற்கு அனுப்பப்பட்ட "அப்பாலோ 11" என்ற ராக்கெட்டில் அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் பயணம் செய்தனர். னுக்கு அந்தக் 6 காலக்கட்டத்தில் சோவியத் ரஷ்யாவும் சந்திர ஆள் இல்லாத ராக்கெட் ஒன்றை அனுப்பியது அதுவும் ஜூலை மாதம்தான்! அந்த ராக்கெட்டிற்கு "லூனா' என்று பெயர்! அது சந்திரனில் ஜூலை 21-ஆம் நாள் சென்று இறங்கியது. 16-ஆம் தேதி புறப்பட்ட அமெரிக்காவின் அப்பாலோ 11 பூமிக்கு மேல் 400 மைல் தூரம் சென்று பூமியைச் சுற்றத் தொடங்கி, அதன் பின் வானவெளியில் பறந்து கொண்டே