பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 175 ஆம்ஸ்ட்ராங். அப்போது அவர் "நான் எடுத்து வைப்பது சிறிய அடிதான்; ஆனால் மனிதகுல நன்மைக்காக எடுத்து வைக்கும் மிகப் பெரிய அடியாகும்" என்று கூறினார். அதற்கு இருபது நிமிடம் கழித்து ஆல்ட்ரின் சந்திரனில் கால் எடுத்து வைத்தார். அவர்கள் இருவரும் சந்திரனுக்குச் சென்றதைக் குறிக்கும் நினைவுச்சின்னத்தை ஆம்ஸ்ட்ராங் திறந்துவைத்தார். அந்தச் சின்னத்தில் பின்வருமாறு எழுதப்பட்டது. "1969-இல் பூமி கிரகத்திலிருந்து மனிதர்களாகிய நாங்கள் முதன் முதலாக இங்கே வந்து கால் வைத்தோம். மனித குலத்தின் நன்மைக்காகவே நாங்கள் வந்தோம்" என்று எழுதப் பட்டிருந்தது. அதில் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ், அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தார் கள். அமெரிக்கக் கொடி ஒன்றையும் அவர்கள் சந்திரனில் நட்டார்கள். டெலிவிஷன் காமிராவைக் கொண்டு சந்திரனின் தோற்றத்தை நன்கு தெரியும்படி படம் பிடித்து பூமிக்கு அனுப்பினார்கள். இருபது பவுண்டு கல், மண் ஆகியவற்றை சந்திர மண்டலத்திலிருந்து சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் அங்கே சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்தார்கள். பிறகு இருவரும் பூச்சி வண்டிக்குத் திரும்பி அதன் கதவுகளை மூடி தாழிட்டார்கள். பிறகு இரவு 11 மணி அளவில் பூச்சி வண்டியை தாய் ராக்கெட்டை நோக்கி செலுத்தினார்கள். சந்திரனிலிருந்து பூச்சி வண்டி சரிவர கிளம்ப வேண்டுமே என்று பூமியில் இருந்த று விஞ்ஞான நிபுணர்கள் கவலையோடு இருந்தார்கள். அந்த வண்டி கிளம்பா விட்டால் வானவெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் பூமிக்குத் திரும்பியிருக்கவே முடியாது. இன்னும் சில மணி நேரம் இருந்து பின் சந்திர மண்டலத்திலேயே பிணமாகி யிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் பூச்சி வண்டி சரிவர இயங்கித் தாய் ராக்கெட்டை நோக்கி வரத் தொடங்கியது. அதுவரையில் சந்திரனைச் சுற்றிக் கொண்டிருந்த தாய் ராக்கெட்டுடன் 22-ஆம் தேதி அதிகாலை 3மணி அளவில் பூச்சி வண்டி வந்து இணைந்து கொண்டது. பிறகு அங்கிருந்து புறப்