பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நெஞ்சுக்கு நீதி ☐ பட்ட தாய் ராக்கெட் பூமியை நோக்கி பறந்து வந்து ஜூலை 24-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் அமெரிக்காவை அடுத்த பசிபிக் கடலில் உள்ள ஹவாய் தீவிற்கு அருகே குறிப்பிட்ட ஒரு இடத்தில் பத்திரமாக வந்திறங்கியது. விண்வெளி வீரர்களை மீட்பதற்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று அங்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்கு ஒன்பது மைல் தூரத்தில் இறங்கிய ராக்கெட்டிலிருந்து ஹெலிகாப்டர் விமானத்திலே ஏறி மூன்று வானவெளி வீரர்களும் அந்தக் கப்பலை அடைந்தனர். அவர்களை வரவேற்க அமெரிக்க அதிபர் நிக்சன் அந்தக் கப்பலில் தயாராக இருந்தார். திரைப்படங்களில் மட்டுமே காட்டக் கூடியதும், காணக் கூடியதுமான ஒரு கற்பனைக் காட்சியை விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலின் காரணமாக உண்மையாகவே நடத்திக் காட்டி மனித குலத்தின் அறிவுக்குக் கூர்மையேற்றினர். அனுப்பி வைத்தனர். சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கற்கள் உலகத்தின் பல நாடுகளுக்கும் பார்வைக்காக அனுப்பி வைக்கப் பட்டன. அவற்றில் ஒரு கல்துண்டை தமிழ் நாட்டிற்கும் அந்தக்கல் சென்னையில் த லைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், செய்தியாளர்களும் மற்றும் பலரும் காண்ப பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கல்லைப் பார்க்கும் பொழுது நம் தெருவில் காணக் கூடிய ஒரு சாதாரண கல்தானே என எண்ணிடத் தோன்றினாலும் அந்தக் கல்லைக் கொண்டு வந்ததின் மூலம் பூமியைப் போன்றே சந்திரனும் ஒரு கிரகம் என்பதும் சந்திரனைப் போன்ற பல கிரகங்கள் விண்வெளியில் இருக்கின்றன என்பதும் அதுவரையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இருந்த நிலை மாறி இப்போது அனுபவ ரீதியான உண்மைகளாகி விட்டன. அதே ஜூலை மாதத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சி குறித்தும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆந்திர மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கோடிக் கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இழப்புகள் ஏற்பட்டன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடிகர் என்.டி.ராமராவ் தலைமையில் தமிழ் நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள் இணைந்து பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி