பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 172 அவற்றின் வாயிலாகக் கிடைத்த ஆறுலட்சம் ரூபாயை 26- ஆம் தேதி அன்று தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் என் தலைமையில் ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்து ஆந்திர முதலமைச்சர் பிரமானந்த ரெட்டி அவர்களையும் அந்த விழா விற்கு அழைத்து என் மூலம் அவரிடம் வழங்கச் செய்தார்கள். அந்த விழாவில் எம். ஜி. ஆர். அவர்களும் கலந்து கொண்டார். அன்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் என்.டி.ராமராவ் அவர்கள் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வேட மணிந்து நடித்தார். அந்த விழாவில் நான் பேசும்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த நானும் ஆந்திராவைச் சேர்ந்த பிரமானந்த ரெட்டியும், மைசூரைச் சேர்ந்த (கர்நாடகம்) தொழிலமைச்சர் ராஜசேகரமூர்த்தியும், கேரளாவைச் சேர்ந்த எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் இருப்பதைப் பார்க்கும்போது திராவிட நாடே இந்த மேடையில் இருப்பதைப்போல் தோன்றுகிறது. நான் குறிப் பிடும் திராவிடநாடு "பிரிய வேண்டும்" என்ற திராவிட நாடு அல்ல; "ஒருவருக்கொருவர் பிரியம்வேண்டும் என்றுகோரும் திராவிட நாடு ஆகும்" என்று குறிப்பிட்டேன். அந்த ஜூலை மாத இறுதியில் கேரளாவிலிருந்து வெளி வரும் "மலையாள மனோரமா" என்ற பிரபல ஏட்டில் என்னைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதியிருந்தார்கள். "எல்லா அரங்கங்களிலும் தலைவருடைய காலடியைப் பின் தொடர்ந்துவந்த ஒரு தொண்டன் கருணாநிதி. அண்ணா அவர்கள் ஒரு நாடக நடிகராக-நாடக ஆசிரியராக-திரைப்பட கதை வசன எழுத்தாளராக இருந்தாரென்றால், கருணாநிதியும் இந்தத் துறைகளில் தனது தெளிவான முத்திரையைப் பதித்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும். புகழ் வாய்ந்த சொல் லாற்றல் மிக்கவராய் விளங்கியவர் அண்ணா. அண்ணா. அந்தத் துறை யிலும் அண்ணாவின் சரியான மாணவராய் கருணாநிதி விளங்கு கிறார். எனவே எல்லா வகையிலும் தலைவரைப் பின் தொடர் கின்ற அருகதை உள்ளவர் கருணாநிதி என்பது தெளிவாகும். ஒரேபோக்கில் போய்க்கொண்டிருந்த திரை உலகை அந்தப் போக்கிற்கு எதிராக தன் எழுதுகோல் அசைவால் மாற்றி அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய பராசக்தி என்ற திரைப்படம் கலையோடு சமூகப் புரட்சியை உருவாக்கியது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.