பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி - 181 ஆளுங்கட்சியிலே இருந்த எங்களை எப்படி மாட்டி வைக்க வேண்டும் என்ற முறையில் பேசுவார். கடுமையாகத் தாக்கிப் பேசினாலும் அதில் அவரது ஆற்றல் இருக்கக் கண்டேன். இன்று அப்படிப்பட்டவரே முதலமைச்சராக இருக்கக் காண்கிறேன். தி.மு.க.வில் வேற்றுமை இருக்கிறது என்று சொல்லப் படுகிறது. கருத்து வேற்றுமைகள் கட்சிக்குள் இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில் கலைஞர் கருணாநிதி அந்தப் பூசலைத் தீர்த்து விட்டார். எப்படி என்றால் அவர் விட்டுக் கொடுத்திருக்கிறார். விட்டுக் கொடுத்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டு கிறது" என்ற அளவிற்குப் பாராட்டினார். இடமாற்றத்தின் இப்படி என்னைப் பாராட்டியவர்கள் காரணமாகவோ அல்லது கருத்து மாற்றங்களின் காரணமாகவோ சில சமயங்களில் என் மீது மறைமுகமாகவோ அல்லது நேரடி யாகவோ தாக்குதல் கணைகளைத் தொடுத்திட்டபோது முன்பு அவர்கள் என்னை வாழ்த்திப் போற்றியதை நினைவுகூர்ந்து அவர் களிடம் தனிப்பட்ட முறையில் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வதிலிருந்து நான் விலகிச் சென்றதே கிடையாது.