பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நெஞ்சுக்கு நீதி தமிழ இனத்தைச் சார்ந்தது கருதியோ? குன்றக் குடியைக் குன்ற விடாமல் நின்று விளக்கிட நினைத்தோ? இவரை ஏற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணமோ? ஒதுங்கி மடத்தில் உட்கார்ந் தவரை மன்றில் நிறுத்தி வேடிக்கை பார்க்கவோ? பிறந்த மொழியைப் பயின்றநாள் தொட்டுத் தொண்டு நெறியின் சுவைதே றியநீ நம்மையும் தொண்டு நெறியில் நடாத்தித் தூண்ட கருதியோ? தொன்மைச் சிறப்பின் தாரணி புகழும் தஞ்சை மண்ணிடை ஒருங்கே பிறந்தோம் எனும்பா சத்திலோ? சென்ற நாட்களில் சிலதுறை யேற்றுத் தொண்டு செய்ததில் தொடர்ந்த துன்பத்தை கண்டு களைந்திடுங் கருத்தது தானோ? தமிழ்மொழித் துறையில் தக்கபே ரறிவ இல்லை யெனினும் எழிற்றமிழ்ப் பற்று மிக்கோர் என்னும் விரிந்த கருத்திலோ? இழிசா தீயெனக் கிடந்தநம் இனத்தை ஏற்ற முறச் செய் பெரியார் எம்மிடைக் கொண்ட பாசம் குறித்து நினைத்ததோ? எதுவென அறியோம்! யாது செய் வதென விளங்கவு மில்லை! வேண்டுவ தொன்று இன்றே போல்க, உமது கேண்மை! தாங்கு புகழார் தரணிக்கு நீசெய்யும் பணிக்குடன் நிற்கும் வாய்ப்பளித் தமைக்கு உளமார் நன்றி! உவந்துரை செய்தோம். எழுபிறப்பும்யாம் எம்முளம் கொள்வோம் உழுவலன்புத் திறத்தினை வாழ்த்துவோம். -இடையிலே அடிகளாருக்கு எத்தனையோ சங்கடங்கள்! நான் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகன்ற பிறகு அவரும் நானும் சந்திக்க முடியாத இடர்ப்பாடுகள்! அப்படி சந்தித்தால் அவருக்கே எத்தனையோ தொல்லைகள் விளையும். அதனால்