பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நெஞ்சுக்கு நீதி மற்றொரு புறம்! கம்பனும், திருவள்ளுவனும்தான் தமிழுக்குக் கதி என்பார்கள். அந்தக் 'க'வும், 'தி'யும் அவரது பேரிலேயே முதலும் கடையுமாக அமைந்துள்ளன. தமிழ்த் தாயின் செல்லப் பிள்ளை அவர்" என்று என்னைப் பாராட்டினார். அந்த விழாவில் பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள், "கழகம் எந்தச் சமுதாயத்தை ஆளுகிறதோ அந்தச் சமுதாயத்தின் பலதரப்பட்ட இயல்புகளையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டார். அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே எந்தத் தரப்பிலி ருந்து வரும் எத்தகைய பிரச்சினைகளையும் கழக அரசு தனது அணுகும் முறையின் மூலம் மதித்து நடந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. சிலம்புச் செல்வரின் தலைமையிலுள்ள தமிழரசுக் கழகத்தின் சார்பில் அதே ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 19 - ஆம் நாள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டு தமிழகம் முழு வதும் ஒரு நாள் கிளர்ச்சி நடத்துவதென்றும், சென்னையில் தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவெடுத்து அறிவித்திருந்தார். அதையொட்டி ஆகஸ்ட் 18-ஆம் நாள் தமிழக சட்டப் பேரவையில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சீமைச்சாமி அவர் களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பையா அவர்களும் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். ஏ.கே. அந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்து நான் பேசும்போது, "தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் நாளை நடத்தப்போகும் சுயாட்சி கிளர்ச்சியையொட்டி ஒத்திவைப்புத் தீர்மானம் எதுவும் தேவையில்லை என்று கருது கிறேன். ஆளுங்கட்சியான தி. மு. கழகம் சுயாட்சிக் கொள்கை யில் ஆழ்ந்த அக்கறையும் தீவிர ஈடுபாடும் கொண்டுள்ளது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்பதை நான் டெல்லி சென்றிருந்த போதும், எனது வேறு பல அறிவிப்புகளிலும் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். அதற்கு முன்னால் பொதுப்படையாக மாநில சுயாட்சி என்று கூறிடாமல் என்னென்ன அதிகாரங்கள் நமக்குத் தேவை