பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190நெஞ்சுக்கு நீதி எனது அழைப்பையேற்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருத்திருமன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ஏ. கே. சுப்பையா, ஏ.ஆர்.மாரிமுத்து, கே.ஆர். நல்லசிவம், ஏ. பாலசுப்ரமணியம், பி.கே.மூக்கையா தேவர், காரைக்குடி சா. கணேசன், எஸ். எஸ். ராமசாமி. படையாச்சியார் ஆகிய பல்வேறு கட்சித் தலைவர்களும் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். "இன்றைக்காவது ஒரு நாள் வெவ்வேறு மேடைகளில் ஒருவரையொருவர் ஏசிப் பேசிக் கொண்டிராமல் ஒரு மேடையில் அனைவரும் சந்தித்து விடுதலை விழா எடுப்போம் என்ற ஆசை யோடுதான் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். டெல்லிப்பட்டணத்தில் பிரதமர் நிகழ்த்துகின்ற விடுதலை நாள் விழா உரையினை பத்திரிகைகளில் படிக்கிறோம். விழா நிகழ்ச்சி களை படங்களில் பார்க்கிறோம். இனி விடுதலை நாள் விழாவின் போது இந்தியப் பிரதமர் ஆண்டுக்கு ஒரு மாநிலமாக வர வேண்டும். அந்த மாநிலத் தலைநகரங்களில் பிரதமர் கலந்து கொள்கின்ற விடுதலை நாள் விழா நடைபெற வேண்டும்" என்று அந்த விழாவில் எனது கருத்தினை வெளியிட்டேன். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்படி எல்லா கட்சியினரும் கலந்து கொண்டு தலைமைச் செயலக கோட்டை முகப்பில் விழா நடத்துவதற்கு இயலாமல் போயிற்று! ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ல் மாநில தலைநகரங்களின் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. அந்தக் கொடியேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு ஏன் அளிக்கப்படக் கூடாது என்று நான் டெல்லிக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதியதாலும் நேரிலே சென்று வாதாடியதாலும் இனி ஜனவரி 26 குடியரசு தின விழாவில் மட்டும் கவர்னர் கொடி யேற்றுவது என்றும், ஆகஸ்ட் 15 விடுதலை நாள் விழாவில் முதலமைச்சர்களே கொடியேற்றுவதென்றும் தமிழ் நாட்டிற்கு மாத்திரமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் உரிமை வழங்கப் பட்டது. எங்கே சந்து பொந்து கிடைக்கும், நுழைந்து விடலாம் என்று எதிர்பார்த்திருக்கும் இந்தி தணிக்கைச் சான்றிதழில் தலை நீட்டியது 69 ஆகஸ்ட் மாதத்தில் தான்! ஒரு தமிழ்த் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, அதற்கு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் அதனை இந்தி மொழியில் படத்தயாரிப்பாள