பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 191 ரிடத்தில் கொடுத்தார்கள். அந்தத் தகவல் எனக்குக் கிடைத்தவுடன் இந்தியப் பிரதமருக்கு அவசரத் தந்தி ஒன்று அனுப்பினேன். "தமிழ்த் திரைப்படங்களுக்கு மத்திய தணிக்கைக் குழு முன்பு தந்தது போல ஆங்கிலத்தில் சான்றிதழ் தராமல் ஆங்கிலத் திலும், இந்தியிலும் சான்றிதழ் தரும் முடிவு கண்டு எனது வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை இருந்து வந்த நடைமுறையை மாற்றியமைப்பது விரும்பத்தக்கதல்ல. இந்த நடவடிக்கை திரைப்பட உலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் மாபெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக் கிறது. தக்க சமயத்தில் தலையிட்டு தற்போது நடைமுறையில் இருப்பதையே (ஆங்கில சான்றிதழ் சான்றிதழ் தருவதையே) மீண்டும் அமுலாக்கிட விரும்புகிறேன். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு அக்கறை செலுத்தி ஆங்கிலத்தில் மட்டுமே சான்றிதழ் தரும் நடைமுறையினை மேற்கொள்ள உத்தரவிட தமிழக அரசின் சார்பில் உறுதியாக வலியுறுத்துகிறேன்.” எனது தந்தியின் விளைவாக மறுநாளே டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத் திலேயே சான்றிதழ் வழங்குமாறு, மத்திய பிலிம் தணிக்கை போர்டு தனது பிராந்திய போர்டுகளுக்கு உத்தரவிட்டது. off