பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நெஞ்சுக்கு நீதி அன்றையதினம் கறுப்புச் சட்டை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கில் கழக முன்னோடிகளின் தலைமையில் பேரணி நடத்தி இந்தித் திணிப்புக்குத் தமிழகம் ஒருபோதும் இடம் தராது என்பதை இமயம் முட்ட எடுத்து இயம்பினோம். சென்னையில் என்னுடைய தலைமையிலும், கோவையில் பேராசிரியர் தலைமையிலும், திருச்சியில் சாதிக் தலைமையிலும், மதுரையில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி தலைமையிலும் இந்தப் பேரணிகள் நடை.பெற்றன. கழகம் ஆட்சியில் இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்பை நனைந்து போக விட்டுவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த அத்தியாயத்தில் திரைப்பட தணிக்கை சான்றிதழில் இந்தி புகுத்தப்பட்டதை அரசின் சார்பில் நான் எதிர்த்த்தையும், மத்திய தணிக்கைக் குழு உடனடியாக திருத்திக் கொண்டதையும் குறிப்பிட்டிருந்தேன். அதைப்போல "பிராந்தியச் செய்தி” என்று வானொலியில் சொல்லப்பட்டது "மாநிலச் செய்தி" என்று மாற்றப்பட்டதும், "ஆகாஷ்-வாணி" என்பது "வானொலி" என்று மாறியதும் கழக ஆட்சி எடுத்த முயற்சிகளின் விளைவுகளேயாகும். 1968- ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது தமிழ்நாடு தேசிய மாணவர் பயிற்சிப் படையில் (என்.சி.சி.) இந்தி கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படும் வரையில் அந்தப் படையே ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் அல்லவா. அதன்படி என்.சி.சி. தமிழகத்தில் செயல் படாமலே இருந்து வந்தது. அதை மீண்டும் செயல்பட வைக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர்கள் என்னிடம் வற்புறுத்தி வந்தார்கள். தமிழ்நாட்டில் என். சி. சி. படை மீண்டும் துவக்கப்பட வேண்டுமென்றால் கட்டளைச் சொற்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டுமென்று தமிழக அரசின் சார்பாக நான் தெரிவித் தேன். அந்த நிபந்தனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக 1969 செப்டம்பர் திங்களில் தமிழகம் வந்த மத்திய அரசின் துணை அமைச்சர் எம்.ஆர்.கிருஷ்ணா அவர்கள் என்னி டமும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரிடமும் தெரிவித்தார். இப்படி அடிக்கடி சந்து பொந்துகளில் தலைநீட்டிப் பார்ப் பதும், தமிழர்கள் ஏமாந்து விடவில்லை, விழிப்போடுதான் இருக்