பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நெஞ்சுக்கு நீதி அந்த மேடையில் நான் உரையாற்றும் போது "கடந்த பல மாதங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஆறாம் தேதி, பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டினுடைய கவர்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு இந்த நீண்ட நெடிய படிக் கட்டுகளில் இறங்கி வந்து கீழே ஆயிரக் கணக்கில் நின்று கொண்டிருந்த ஏழையெளிய மக்களுடைய அன்புக் கரங்களை எல்லாம் தழுவி அவர்களுடைய விழிகளிலே சங்கமமாகி இதயங் களோடு கலந்து தமிழகத்தினுடைய நல்வாழ்த்துக்களைப் பெற்றுத் தமிழக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். எட்டு மாதங் களுக்குமுன், நம்மைவிட்டுப் பிரிந்தபோதும் இதே இடத்தில்தான் நமக்கெல்லாம் கடை.சியாக தரிசனம் கொடுத்துக் கொண்டிருந் தார். அந்த இடத்தில் இன்று அந்தத் தலைமகனுடைய திரு உருவப் படத்தை, நம்மையெல்லாம் 'தம்பீ, தம்பீ" என்று அழைத்து வாழ்த்திய அந்தப் பெருமகனுடைய திரு உருவப் படத்தைத் திறந்து வைப்பதற்காக இந்தியாவின் பிரதமர் வருகை தந்துள்ளமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா அவர்கள் வளர்த்த கழகத்தினுடைய ஆட்சி அவரது மறைவிற்குப் பிறகு நிலைக்குமா, நீடிக்குமா என்று இங்கிருக்கின்ற சிலர் மட்டுமல்ல, டெல்லிப் பட்டணத்தில் அமர்ந்திருக்கின்ற பிரதமர் அவர்களே, நீங்கள்கூட சந்தேகப் பட்டிருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் அவ்வளவு சொத்தை சோடை அல்ல. எங்கள் அண்ணன் தனக்குப்பிறகு ஒரு பெரிய பாரம்பரியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதற்குச் சாட்சி தான் நீங்கள் காணுகின்ற இந்த மக்கள் வெள்ளமாகும். ஆகவே அண்ணன் உருவாக்கிய கழக ஆட்சி தமிழ்நாட்டி னுடைய பண்பாட்டை, தமிழ்நாட்டினுடைய பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது மாத்திரமல்லாமல், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நாங்கள் உங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பதைப் போல மத்திய அரசோடு உறவுக்குக் கை கொடுப்போம், அதே நேரத்தில் என்றென்றும் உரிமைக் குரல் கொடுக்கத் தவற மாட்டோம் என்பதையும் உங்கள் முன்னிலையிலேயே நான் எங்கள் அண்ணன் தந்த பெருமிதமான உணர்வோடு சொல்லிக் கொள்கிறேன்" என்று நிலைகுலையா உறுதியுடன் அந்தக் கூட்டத் தில் தெரிவித்துக் கொண்டேன். கழகம் என்றால் என்ன என்பதையும் அண்ணாவின் மீது தமிழக மக்களுக்குள்ள அன்பையும் புரிந்து கொள்ள அந்த