பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 199 விழாவை தமிழக அரசின் சார்பாக சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்து அவ்வாறு நடத்தப்பட்டது. நூற்றாண்டு விழாவினை யொட்டி அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டன. பல நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. அக்டோபர் முதல் நாள் மாலை காந்தி இல்லம் கண் காட்சி திறப்பு விழாவினை பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் நான் நிறைவேற்றி வைத்தேன். அக்டோபர் 2-ஆம் நாள் காலை எட்டு மணி அளவில் கடற்கரை காந்தி சிலை அருகில் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப் பட்ட அலங்கார வண்டிகளின் பேரணி நடைபெற்றது. அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத் திது காந்தியடிகளின் நூற்றாண்டு விழா ஆளுநர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அன்று மாலை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. . அந்தக் கூட்டத்தில் மூதறிஞர் ராஜாஜி, கண்ணியத்திற் சூரிய காயிதே மில்லத், திரு. சி. சுப்பிரமணியம். திரு. பி. ராம மூர்த்தி, திரு.எம். கல்யாணசுந்தரம், திரு. நல்லசிவம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., திருமதி. சௌந்திரம் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நாட்டின் மாபெரும் தலைவர்களைக் கழக அரசு பெருமைப் படுத்தத் தவறவில்லை என்பதற்கு இது போல் எண்ணிறந்த நிகழ்ச்சிகள் உண்டு! offe