பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 நெஞ்சுக்கு நீதி ☐ 15-ஆம் நாள் திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சிகள் தொடங்கின அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சீரணித் தொண்டர்களின் உழைப்பைப் பயன்படுத்தி பதினைந்தே நாட்களில் சென்னைக் கடற்கரையில் சீரணி மேடை ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவினை வைத்தேன். நான் நடத்தி பிறந்த நாள் விழாவையொட்டி அண்ணா அவர்களின் முழு உருவச் சிலை ஒன்று சேலம் நகரில் புதிய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின் தலைமையில் என்னால் திறந்து வைக்கப் பட்டது. அந்த விழாவிற்குக் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தனது துணைவியாருடன் வந்திருந்தார். விழா ஏற்பாடு களை நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜாராம், பெரியவர் ஜி.பி. சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். கிருஷ்ணன் ஆகியோர் முனைந்து கவனித்தனர். அந்த விழாவில் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் தனது தலைமையுரையில் அண்ணா அவர்களின் அருமை பெருமைகளையும் அறிவாற் றலையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டதைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது "கருணாநிதி கருணைக்கும் நிதிக்கும் கருவூலமாக விளங்குகிறார். அவரது கருணை வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. செயல் வடிவம் கொண்டது. தெற்கேயிருந்து கருணாநிதியும் அவரது தோழர்களும், அதைப் போல் வடக்கேயிருந்து குர்னாம்சிங்கும் அவரது தோழர்களும் நான் இந்தியக் குடியரசுத் தலைவராக வர வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தார்கள் என்பதை நன்றியுணர்வோடு என்றைக்கும் நினைத்திடக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று உருக்கத்துடனும் உணர்ச்சி ததும்பவும் வார்த்தைகளைக் கொட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் குர்னாம்சிங் அவர்கள் என் பால் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர். அஃதேபோல் நானும் அவரிடம் தனி அன்பு செலுத்தியவன். மாநிலங்கள் சுயாட்சி பெறவேண்டும் என்ற கொள்கையில் எனக்கும் ஒருமித்த கருத்து இருந்து வந்தது. அவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மோகன் குமாரமங்கலத்தை யும், பாலதண்டாயுதத்தையும் பலி கொண்ட விமான விபத்து குர்னாம் சிங் அவர்களையும் நம்மிடமிருந்து பறித்துவிட்டது. அவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாநில வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தலை சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தார்.