பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 203 ☐ இன்றைய பஞ்சாப் பல்வேறு தீர்வு காணப்படாத பிரச்சினை களின் காரணமாக வன்முறைக் களமாக விளங்கிக் கொண்டிருக் கிறது. ஆனால் அன்றைய பஞ்சாப் அமைதியின் தொட்டிலாகக் காட்சி அளித்தது. அந்த நேரத்தில் பஞ்சாப் முதல்வர் குர்னாம்சிங் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய எனக்கு அன்பழைப்பு விடுத்தார். முக்கியமாக சண்டிகர் நகரில் நடைபெற்ற குருநானக் அவர்களின் 500-வது பிறந்த நாள் விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டதின் பேரில் நானும், பொதுப்பணி அமைச்ச ராக இருந்த சாதிக் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரசொலி மாறன்,வி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் 1969 நவம்பர் 26-ஆம் நாள் டெல்லி சென்று அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சண்டிகர் நகர் நோக்கிச் சென்றோம். சண்டிகருக்கு டெல்லியிலிருந்து இரவு நேரத்தில் கார் பயணம் செய்வது மிக இதமான ஒரு நிகழ்ச்சியாகும். காரில் சென்று கொண்டிருந்த எங்களுக்கு இரவு 11 மணி அளவில் நல்ல பசியெடுத்தபோது சாலையோரத்தில் மினுக் மினுக்கென்றுவிளக்கு எரிந்துகொண்டிருந்த பழைய மண்டபம் -ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அருகே சென்றோம். சீக்கியர் உடையில் சாதுக் கோலம் பூண்டு அந்த மண்ட பத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பேச முனைந் தோம். நண்பர் கிருஷ்ணமூர்த்தி தனக்குத் தெரிந்த பஞ்சாப் மொழியில் அவரிடத்தில் இந்தப் பகுதியில் எங்கே உணவு கிடைக்கும் என்று கேட்டார். அந்த சாது எதுவும் பேசவில்லை. ஆனால் தன்னுடைய கையைத் தட்டி யாரையோ ஜாடையாகக் கூப்பிட்டார். அவரது பணியாளர் ஒருவர் ஓடி வந்தார். அவரி டத்தில் விரல் குறிப்பால் ஏதோ உணர்த்தினார். சில வினாடிகளில் எங்களுக்கு பசியாறத் தேவையான கோதுமை மாவினால் செய்யப்பட்ட ரொட்டிகள் வழங்கினர். அந்த ரொட்டிகளுக்கு சுவை சேர்க்க உருளைக் கிழங்கு குருமாவும் வைக்கப்பட்டது. அவற்றைச் சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்தப் பணியாள ரிடம் இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை நீட்டினோம். பணியாளரைப் பார்த்து சாது தலையை ஆட்டினார். பணி யாளர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவருக்கு நன்றி