பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி209 தலைவராகச் சட்டப் பேரவையில் வீற்றிருந்தேன். அவரது மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தில் நான் பேசியபோது "தமிழகத்தில் ஷேக் அப்துல்லா காவலில் வைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் கோகினூர் மாளிகைக்கு ஷேக் அப்துல்லா நினைவு மாளிகை எனப் பெயரிட வேண்டு" மென வலியுறுத்திக் குறிப்பிட்டேன். இன்று அவரது மகன் பரூக் அப்துல்லா காஷ்மீரத்து முதலமைச்சர்! அவர் தந்தையின் வழி நின்று மாநில சுயாட்சிக் காகக் குரல் கொடுக்கிறார். அதற்கென அவரே முன்னின்று காஷ்மீர் - ஸ்ரீநகரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தேன். திடீரென ஏற்பட்ட உடல் நலிவின் காரணமாக - எனது பயணம் ரத்து செய்யப்பட்டு, கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் சாதிக் அவர்களும், நாடாளுமன்ற மக்களவைக் கழகக் குழுத்தலைவர் சி.டி. தண்டபாணி அவர்களும் கலந்து மாநாட்டில் அந்த கொண்டனர். மத்திய காஷ்மீரில் - ஸ்ரீநகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட மாநில உறவு பற்றிய கருத்துக்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறது. மாநிலத்தில் சுயாட்சியும் மத்தியிலே கூட்டாட்சியும் என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாதென்று - மத்தியில் உள்ள அதிகாரங்கள் எவையெவை எவையெவை வேண்டும்; மாநிலங்களுக்கு மாற்றப்பட நீக்கப்பட வேண்டும் என்பன போன்ற விரிவான விபரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக 1969-ல் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களை யும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்திரா ரெட்டி அவர்களை யும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு கழக அரசினால் அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் முரசொலி மாறன், இரா. செழியன் குழுவினர் கருத்துக்களையும் இணைத்து -அதன் பின்னர் அரசின் சார்பில் ஏப்ரல் அமைச்சரவையில் விவாதித்து 1974-ஆம் ஆண்டு 20-ஆம் நாள் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.