பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நெஞ்சுக்கு நீதி என மத்திய - மாநில உறவுகள் எப்படி அமைந்திட வேண்டும் விவாதித்து, மாநில சுயாட்சிக்கான ஆக்கபூர்வமான தீர்மானமொன்றை இந்தியாவிலேயே முதன் முதலாகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தி.மு.கழக ஆட்சிக்கே உரியது. முன் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை மொழிந்த போது, "மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டும், பெற்ற சுதந்திரத்தின் பயனை நாடு அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நெஞ்சில் பதித்துக்கொண்டும் இந்திய அரசியல் அரங்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் நாம் ஏற்றி வைக்கும் இந்தச் இந்தச் சுடர்விளக்கு ஒளிவிட அரசியல் மேதைகள் தூண்டுகோலாக இருக்க வேண்டுமென்று பணி வன்புடன் கோருகிறேன்" என, நான் விடுத்த அந்த வேண்டு கோள் வீண் போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் பெங்களூரிலும், காஷ்மீரிலும் நடைபெற்ற நடைபெற்ற மாநாடுகள் அமைந்தன. தமிழக சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1974-ஆம் ஆண்டுக்கும்-பெங்களூர், காஷ்மீர் நகரங்களில் மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்திடும் மாநாடுகள் நடைபெற்றுள்ள 1983-ஆம் ஆண்டுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன என்றாலும்; மத்தியில் அளவுக்குமீறி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங் கள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு மாநிலங்கள் சுயாட்சி பெற்று மத்தியில் உண்மையான கூட்டாட்சி அமைப்பு உருவாக வேண்டுமென்ற முனைப்பான கருத்து பட்டுப் போய் விடவில்லை! மத்திய அரசு பலமுள்ளதாக இருக்கவேண்டும் என்ற பலவீனமான வாதத்தை வைத்துக் கொண்டே மாநிலங்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிட முடியாது! மாநிலங்கள் வலு வுள்ளவைகளாக இருந்தால் மட்டுமே மத்திய அரசும் வலு வுள்ளதாக இருந்திட இயலும்! இதுவரையில் எல்லையற்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் இந்தச் சுதந்திர இந்தியாவில் மத்தியப் பேரரசு பணக்காரர்களுக்கான சொர்க்கத்தையும், ஏழைகளின் நரகத்தை யும் உலகத்திற்குக் காட்சியாக்கியதைத் தவிர உருப்படியாகச் செய்தது என்ன?