பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நெஞ்சுக்கு நீதி இன்றைக்கு அந்த அறிக்கையில் அரசியல் சட்டத்தின் இன்ன பிரிவைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது எனத் தேடிப் பார்த்துத் தெளிவு பெறுகிற அளவுக்கு அரசியல் மேதை கள் ஆர்வங் காட்டுகிறார்கள் என்கிறபோது, அந்த அரிய பணிக்கு வித்திட்டவன் என்ற முறையில் மகிழ்ச்சியில் திளைப்பது இயற்கைதானே! 1969-ல் ராஜமன்னார் குழு மட்டுமல்லாமல் அரசின் சார்பில் வேறு குழுக்களும் குழுக்களும் வெவ்வேறு பணிகளுக்காக அமைக்கப் பட்டன. தமிழக அரசில் பணியாற்றக்கூடிய ஏழு லட்சத்தை எட்டிப் பிடிக்கும் எண்ணிக்கை கொண்ட அரசு அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரண்டாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று தமிழகக் காவல்துறையினருக்கு வீர விருதுகள், பண முடிப்புகள், பதக்கங்கள் அளிக்கப்படு மென்றும் அறிவித்ததோடு இந்தியாவிலேயே முதன் முதலாக "காவல் துறை கமிஷன்" ஒன்றையும் நியமிப்பதாக அறிவித் தேன். அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரியான ஆர்.ஏ.கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சாமிநாதன், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என். கிருஷ்ணசாமி, சிலம்புச்செல்வர் ம.பொ.சி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப் பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைப் பேணுவதற் காகவும், கடந்த காலத்தில் அவர்கள் பெற்ற வசதி வாய்ப்புகளைப் பரிசீலித்து மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்காகவும், பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்றும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஏ. என். சட்ட நாதன். உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளான சின்னப்பன், ஜமால் உசேன் ஆகியோர்! ம அரசு அலுவலர் இரண்டாவது ஊதியக் குழுவின் பரிந் துரைகளை ஏற்று அரசு எடுத்த முடிவுகளை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டினர். அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற நீண்ட காலக் கோரிக்கையை ஊதியக் குழு ஏற்று, அதனை அரசும் அறிவித்தது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, அலுவலர் ஊதிய உயர்வு