பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இறைவனுக்குப் பிடித்த பணி! குமாரவேலன், குழந்தைவேலன், கஸ்தூரி ராஜ், முல்லை சத்தி ஆகிய நால்வருடன் நானுட்பட ஐந்து பேர் 1953-ஆம் ஆண்டில் டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை கல்லக்குடி என மாற்ற வேண்டுமென்று களம்சென்று ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெற்ற நிகழ்ச்சியை முதல் பாகத் தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். ரயிலை தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து நிறுத்தியதற்காகத் திருச்சி சிறையில் சிறையில் ஆறுமாதக்கடுங்காவல் தண்டனையை அனுபவித்த எங்கள் ஐவரில் இப்போது நான் ஒருவன்தான் மிச்சமிருக்கிறேன். இடைப்பட்ட முப்பதாண்டு காலத்தில் மற்ற நால்வரையும் சாவு, தனது வாய்க் குள் போட்டுக்கொண்டு விட்டது. சிறைக்குள்ளேயே நோய்வாய்ப்பட்ட குமாரவேலன் விடுதலை பெற்ற சில நாட்களில் மறைந்து விட்டார். அவரைத் தொடர்ந்து குழந்தைவேலனும் பிரிந்துவிட்டார் முல்லை சத்தி என்னைக் கொழு கொம்பாக்கிக்கொண்டு என்மீது படர்ந்து நட்பு மணம் பரப்பிய இனிய தோழர்! வடஆற்காடு மாவட்டத் தில் வாணியம்பாடிக் கருகில் உள்ள முல்லைக்கொம்மை என்ற சிற்றூர் அவரது சொந்த ஊர் எனினும் சென்னையில் அச்சகத் தொழிலில் ஈடுபட்டு சென்னையிலேயே தங்கியிருந்தார். ஒரு நாள் பிற்பகல் அவர் இல்லத்திலிருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. வீட்டில் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந் தவர், வெளியில் புறப்பட்டுப் படிகளில் இறங்கியபொழுது அம்மா!" என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர் தான்; டாக்டர்கள் வருவதற்குள் உடல் சில்லிட்டு விட்டது. அதைப்போலத்தான் மணப்பாறை கஸ்தூரி ராஜ் - பழனிக்குச் செல்ல வேண்டுமென்று குடும்பத்தார் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே அவருக்கு நெஞ்சு வலி! பழனி மலையில் ஏறுகிற மின்விசைச் சாதனத்தில் ஏகக் கூட்டம் - குடும்பத்தாரை அதில் ஏற்றி அனுப்பி விட்டு, அவர் அங்கே காத்திருக்க மனமின்றி படிகளில் ஏறி மேலே சென்றிருக்கிறார். "அய்யோ, இந்த