பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கடைசி நேரத்தில் வர இயலாமை குறித்துக் குடியரசுத் தலைவா செய்தி அனுப்பி விட்டார். “தினமணிக் கதிர்" நிறுவனத்தார் திகைத்தனர். நண்பர் நண்பர் சாவி அவர்கள் குமுறினார். நானோ எழுத்தாளன் மட்டுமல்ல; முதல்வர் பதவியென்ற முள் முடியையும் சூட்டிக் கொண்டிருப்பவன் அப்போது! விழாவுக்கு வர மறுத்துவிட்ட குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்கள்; அந்தப் பதவிக்குப் போட்டியிடும் பொழுது என் வீடு தேடி வந்து கட்சியின் வாக்குகளைக் கேட்டவர்தான்! என்ன செய்வது; எப்படியோ தடுக்கப்பட்டு விட்டார்! நான் யாரையும் நொந்து கொள்ளவில்லை. என்னையே தான் நொந்து கொண்டேன்! கதிர் நிறுவனத்தார் என்னிடம் அப்படி ஒரு யோசனையைக் கூறியபொழுதே நான் மறுத்திருக்க வேண்டும்! பதவிச் சிம்மாசனத்தில் வீற்றிருப்போர் வந்து வாழ்த்துவது பராட்டுவது என்பது ஒரு சம்பிரதாயமே தவிர, பாசமும், நேசமும் கொண்டு நம்முடனே இருப்போர் மனந்திறந்து கூறும் சொல்லுக்கு முன்னால் அந்தச் சம்பிரதாயம் சம்மட்டியடி விழுந்த செங்கல்லாய் நொறுங்கிப் போகும் என்பதை என் நெஞ்சம் ஒரு கணம் மறந்து விட்டதால் வந்த வினை! ஒரு நூல் வெளியீட்டு விழா நாள் தள்ளிப் போடப்பட்டது! எப்படியும் ஒரு நாள் நடத்தியே தீரவேண்டுமெனத் "தினமணிக் கதிர்" பதிகத்தார் என்னைத் துளைத்து எடுத்தனர். அவர்களது பிடிவாதத்தை வென்றிட என்னால் முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு நிபந்தனையோடு அந்த விழாவுக்கு ஒப்புதல் அளித்தேன். அந்த நிபந்தனையைப் பதிப்பகத்தினர் ஏற்றுக் கொண்டனர். என் நிபந்தனையை ஏற்று அவ்வாறே அழைப்பிதழ் அச்சியற்றப்பட்டது. 1975 ஏப்ரல் 30-ஆம் நாள் நிகழ்ச்சி! விழாவுக்குத் தலைவர், கண்ணொளியற்றவரும் தமிழக விழியிழந்தோர் சங்கத் தலைவருமான நண்பர் ஆசிர். நல்லதம்பி! நூலை வெளியிடுபவர் தொழுநோய் மறுவாழ்வு சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் முகமது அலி! அவரும் அந்த நோயினால் தாக்குண்டவர்தான்! நூலின் முதல் பிரதியைப் பெறுபவர் செல்வி சாந்தகுமாரி! கால் ஊனமுற்ற சகோதரி! மற்றும் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இனிய நண்பர் அப்துல் சமது, குன்றக்குடி அடிகளார், தமிழறிஞர்