பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி223 ஒன்றைக் குறிப்பிட்டார். பெரியாருடைய ஆசைகளை எல்லாம் எவ்வளவோ நிறைவேற்றினோம்; ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை. ஆகவே அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்திருக்கிறோம் என்று சொன்னார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே, அரசியல் சட்டத்தைத் திருத்தி, அர்ச்சகர் சட்டத்தை நடை முறைக்குக் கொண்டுவர வழிவகை செய்யுங்கள்" என்று உருக்கத் துடன் கேட்டுக் கொண்டார். மணியம்மையார் அவர்கள் இவ்வாறு அந்த விழாவில் பெரியாரின் கடைசி ஆசையைப்பற்றித் தெரிவித்துப் பேசிய தற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அதே விழாவில் பதில் சொன்னார். எந்தச் சாதியைச் "இங்கே பேசிய மணியம்மையார் சேர்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று பெரியார் விரும்பினார்; அதை கருணாநிதி நிறைவேற்றினார் என்றார். நான் மறுத்துச் சொல்வதற்காக அம்மையார் கோபித்துக் கொள்ளக் கூடாது. கோயில்களையே வேண்டாம் என்ற பெரியார் அர்ச்சகரா வது பற்றிப் பேசினாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது" என்றார். "பெரியாரின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு பெரியாரைப் பற்றிப் பேசாமல் இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியிருக்கி றார்" என்று மணியம்மையார் அவர்கள் அது பற்றி பின்னர் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தார். கோயில்கள் இருக்கும்வரையில்-அங்கு அர்ச்சனைகள் நடைபெறும் வரையில் அங்கே மனித சமூகத்தின் சமநீதி காக்கப் பட வேண்டுமென்பதுதான் பெரியாரின் கருத்து அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். அப்போது அப்படிக் கூறினார். 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும் போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களையும் அந்த மேடையில் வைத்துக் கொண்டு மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளில் "பெரியா ருக்கு எத்தனை போ விருப்பங்கள் உண்டு. சாதிபேதமற்ற