பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 229 என் வாழ்க்கையில் எத்தனை நண்பர்கள் எனக்குத் துரோகி யானார்கள் என்ற கசப்பு மிகுந்த கணக்கே என் கவனத்திற்கு வந்திருக்காது - என் நெஞ்சத்தையும் கலக்கியிருக்காது! பழமைவாதிகள் கூற்றுப்படி சொல்ல வேண்டுமேயானால் பட வேண்டிய வேதனைகள் பல இருக்கும்போது-சுடு சொல் லாளர் விடுகணைகளை ஆயிரம் ஆயிரமெனத் தாங்க வேண்டு மென்று தலையில் எழுதியிருக்கும்போது-தமிழன் என்ற உணர்ச்சி யற்ற தக்கை மனிதர்களின் தன்மானமிழந்த செயல்களைக்கண்டு குமுறியழ வேண்டுமென்று விதியிருக்கும்போது - அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியுமா என்ன? அதற்கு மாறாக இப்படி நினைத்துப் பார்த்து ஆறுதல் கொள்கிறேன். அன்று மரணத்தின் வாயிலிருந்து மீண்ட காரணத்தினால்தான் என் உடன் பிறப்புக்களின் ஒத்துழைப் புடன் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்னாலியன்ற தொண்டாற்ற முடிந்தது என்பதுதான் அந்த ஆறுதல். அந்த இதய உணர் வோடு நான் சென்னையில் எனது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டமொன்றில் கூறிய வாசகங்களை என்றைக்குமே மறக்க மாட்டேன். தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். தமிழர்களே! தமிழர்களே! என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் விழுவேன்- அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்! தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைப் பாறையில் மோதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன்; நீங்கள் என்னைப் பொறுக்கியெடுத்து தின்று மகிழலாம்! . இந்த உணர்வின் வடிவமாக ஆகிவிட்ட நான் திருச்சி மாநாட்டில் நிறைவு உரை ஆற்ற எழுந்த போது என்றுமில்லாத அளவுக்கு என் நாடி நரம்புகள் எல்லாம் அதிர்ந்தன. மேடையிஉ. கழக முன்னணியினர் அனைவரும் இருந்தனர். பொருளாளர் எம்.ஜி.ஆர் மட்டும் முதல் நாள் மாநாட்டுத் திறப்பு விழா உரையை நிகழ்த்திவிட்டு, அன்று காலையிலேயே விடைபெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று விட்டார்.