பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 நெஞ்சுக்கு நீதி ☐ அண்ணா இல்லாத முதல் மாநாடு என்று குறிப்பிட்டேனே. அந்த மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நினைவூட்டித்தான் ஆகவேண்டும். கழகக் கண்மணிகளே! அருமைத் தாய்மார்களே! பெரியோர்களே! "பேரறிஞர் அண்ணா அவர்களே"... என்று அழைத்துப் பேச்சைத் தொடங்கவேண்டிய நான் - இன்று அந்த அண்ணன் எங்கே? எங்கே? என்று தேடுகிற நிலைமையில் உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். "தம்பி வா ! தலைமையேற்க வா?" என்று அழைத்து ஆணை யிட்டதும்,கேட்டு ஓடிவந்த நாவலர் இங்கே அமர்ந்திருக்கிறார். அழைத்து ஆணையிட்ட நீ எங்கே போய்விட்டாய்? மதியழகனுக்கு எப்போதுமே பிடிவாதக் குணம் அதிகம்; ஆனாலும் தான் நினைத்ததைப் பேசி நம்மைக் கவர்ந்து தன் பக்கம் இழுக்கத் தவறமாட்டார் என்று அடிக்கடி புகழ்வீர்களே. அண்ணா! அந்தப் பிடிவாதக்கார மதியழகன் இங்கே க அமர்ந் திருக்கிறார். அவரைப் பிரிந்து எங்கே அண்ணா சென்று விட்டீர்கள்? சிற்றரசு பேசினால் நான் குலுங்கச் குலுங்கச் சிரித்து விடுகி றேனடா தம்பி! என்று சிரிப்பீர்களே அண்ணா, அந்தச் சிற்றரசு இங்கே எங்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தபோது அதை ரசிக்காமல் எங்கே போய்விட்டீர்கள் அண்ணா? க பக்கத்தில் என். வி. என். அமர்ந்து, வெற்றிலை மடித்துத் தர, அதை வாங்கி வெற்றிச் சிரிப்போடு வாய் குழையக் குழையப் போட்டுக் கொள்வீர்களே, அண்ணா! அந்த வெற்றிலை மடித்துத் தர இங்கே என்.வி.என். இருக்கிறார். வெற்றிகளைத் தந்த எங்கள் அண்ணனே, நீ எங்கே போய்விட்டாய்? ஆழமாகச் சிந்திப்பதும் - அமைதியாக இருப்பதும் ஆணித் தரமாக வாதிடுவதும் அன்பழகனின் இயல்பு எனப் பாராட்டுவீர் களே அண்ணா - அந்தப் பேராசிரியர் இங்குளார்; பெருமைமிகு அண்ணனே! நீ எங்கே போய்விட்டாய்? "என்ன முத்து? கோபமாக வருகிறாயா? உட்கார்!" என்று புன்னகை தவழச் சொன்னதும், கோபத்தை எல்லாம் மறந்துவிட்