பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 235 திருக்குறள் முதல் அதிகாரத்துக்குக்கூட அது "தாள்" 'அடி' என்று கூறுவதால் உருவ வணக்கத்தின் சாயலுடையது கிறித்துவ, இஸ்லாமியப் இஸ்லாமியப் புலவர்கள் சிலர் குறைப் என்று பட்டனர். மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம் பிள்ளையை விட இந்து மதத்தைக் கரைத்துக் குடித்தவர், வேதாந்த ஆராய்ச்சியில், கடவுள் ஆராய்ச்சியில் கரை கண்டவர் மிகச் சிலரே இருக்க முடியும். அத்தகையவர் இந்து மதத்தையோ வேறு எந்த மதத்தையோ புண்படுத்தாமல் எல்லா மதத்தினரும் ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் தமிழ் மொழி உருவாகவே பாடிய தேசியக் கடவுள் பாடல்தான் "நீராருங் கடலுடுத்த" என்ற பாடலாகும். அந்த வாழ்த்துப் பாடலைத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தேர்ந்தெடுத்தார் என்றால், அது அவர் கலைப் பண்புக்கு, தமிழன்புக்கு சீரிய சான்றாகும்". பன்மொழிப் புலவர் அப்பா துரையாரின் இந்தக் கருத்தினை யொட்டி சிலம்புச்செல்வர் ம. பொ. சி. அவர்களும் அறிக்கை யொன்றினை விடுத்தார். "நீராருங் கடலுடுத்த" என்று தொடங்கும் பாடல் அரசு விழாக்களிலும், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளி லும் பாடப்பட வேண்டுமென்று கலைஞர் கொடுத்த அறிவிப்பு, தமிழ் மொழிப் பற்றுடைய அனைவர்க்கும் கரும்பாக இனித் திடும்போது - ஏனோ ஆனந்த விகடனுக்கு மட்டும் வேம்பாகக் கசக்கிறது! அரசு விழாக்களில் தமிழைத் தெய்வமாக வழி படுவோம் எனக் கலைஞர் கூறியிருக்கிறார். மொழியைத் தெய்வமாக வழி படுவது பிழையெனில் இந்தப் பிழையை முதலில் செய்த பெருமை, வடமொழியா ளர்க்கே உரிமை! மொழி வாழ்த்தையே கடவுள் வாழ்த்தாகப் பாடுவது பொருத்த மற்றது என்கிறார் கி. வா. ஜ! "ஓம்" என்ற எழுத்து வடிவம்தான் ஒலி வடிவமாக - இறை வடிவமாக பிரணவ மந்திரமாக வழிபடப் படுகிறது என்பதை அவர் மறந்தார் போலும்!" திரு.ம.பொ.சி. அவர்களைத் தொடர்ந்து தமிழ் அறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் "நாடும் மொழியும் ஒருங்கே போற்றப்படும் சிறப்புக்குரிய அந்தப் பாடல் தமிழக மக்கள் ஏற்கத்தக்க வாழ்த்துப் பாடல்" என்று அறிவித்தார்.