பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நெஞ்சுக்கு நீதி பிரதமருக்கு நான் இறுதியாகவும் உறுதியாகவும் ஒன்று கூறிக் கொள்வேன். இந்தக் கூட்டத்தில் சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றி தங்களது அறிவிப்புத் தேவை. இன்னமும் அறிவிக்காமல் இருப்பதன் நோக்கமென்ன? யார் வந்த பிறகு அறிவிக்கலாம் என்று இருக்கிறீர்கள்? கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள 175 கோடி ரூபாய் எல்லா மாநிலங்களுக்கும், எங்களுடைய தமிழ் நாட்டிற்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். வறட்சிப் பகுதிகளில் வேலை வாய்ப்பிற்கு ஒதுக்கப்படும் நூறு கோடி ரூபாயில் தமிழ் நாட்டை வஞ்சிக்கக் கூடாது. இந்த மூன்றிற்கும் தங்களிடமிருந்து ஒப்புதல் கிடைக்காத வரையில் இந்தத் திட்டத்தை நான்கு கோடி தமிழ் மக்களின் சார்பில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் திட்டத்திற்கான சம்மதம் தர முடியாது என்பதையும் திட்ட வட்டமாகக் கூறிக் கொள் கிறேன்." இவ்வாறு நான் கூறியதின் விளைவாக 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17-ந் தேதி அன்று நாமாளு மன்றத்தில் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நான்காம் திட்டத்திலேயே சேலம் உருக்கு ஆலை துவக்கப்படும் என்று என்று அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் திங்கள் 16-ம் நாள் உருக்கு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா என் தலைமையில் நடை பெற்று பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. தொடர்ந்து உருக்காலைக்கான பணிகள் நிறைவேற்றப் பட்டன. நில ஆர்ஜிதம் போன்றவைகள் விரைவு படுத்தப் பட்டன... ஆனால் கழக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்ட பிறகு, உருக்கு ஆலைத் தொழிற்சாலை, உருட்டு ஆலைத் தொழிற்சாலையாக மெலிந்து போயிற்று. ஆ