பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கொள்கை வளர்ந்த நிலை புதுடெல்லியில் நடைபெற்ற தேசீய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் நான் மாநில சுயாட்சி குறித்துப் பேசியதும், சேலம் இரும்பு உருக்காலை இடம் பெறாத நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று கடுமையாகக் கூறியதும் திரு. சி. சுப்பிரமணியம் அவர்களுக்குப் பிடிக்க வில்லை; டெல்லியிலிருந்து திரும்பும் போது விமானத்தில் அவரும் நானும் சந்தித்து அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவரே அதைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் தேவைகளுக்காக உரிமையுடன் போராடு வதில் என்ன தவறு இருக்க முடியும் என்று நான் அவருக்குப் பதில் அளித்தேன். மத்தியில் இருப்போர் எஜமானர் நிலையிலும் மாநில அரசுகள் எடுபிடிகள் எடுபிடிகள் நிலையிலும் இருப்பதை மாற்றியமைத் திடத்தான் மாநில சுயாட்சிக் கொள்கையைத் தி. மு. கழகம் தனது கோஷமாகவே ஆக்கிக் கொண்டது. அன்றைக்கு அந்தக் கோஷத்தைக் கேலி செய்தவர்கள் - கண்டித்தவர்கள்- பிரிவினை வாதத்தின் மறுபதிப்பு என்றெல்லாம் திசை திருப்பிய வர்கள், இன்றைக்கு அந்தக் கோஷம் இந்திய அரசியல் அரங்கில் எத்துணை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டு விட்டார்கள். தமிழ்நாட்டில், மாநில அளவில் மட்டுமல்லாமல் டெல்லி யிலும் முதலமைச்சர்கள் மாநாட்டில் பிரதமருக்கு நேராக மாநில சுயாட்சி முழக்கத்தை நான் எழுப்பியதால் - அது குறித்து வடபுலத்திலே செல்வாக்குப் பெற்ற ஆங்கில ஏடுகள் விமர் சிக்கத் தொடங்கின. 68 டெல்லியில் இருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ்" 1970-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் பின்வருமாறு ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. என். எஸ். ஜே. என்பவர் அந்தக் கட்டுரையைத் தீட்டியிருந்தார்.