பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நெஞ்சுக்கு நீதி மனிதர்கள் வர மறுத்துவிட்ட பிறகு தெய்வங்களைத் தலைமை தாங்கவும், நூலை வெளியிடவும், முதல் பிரதியைப் பெறவும் அழைத்தது நியாயம்தானே? 1975-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் மட்டுமல்ல; 1969-ல் முதல்வர் பொறுப்பை ஏற்றிடும் வேளையிலேயே வேதனைகளும், சோதனைகளும்தான்! அண்ணாவை இழந்து விட்ட கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தவாறு தானே கையில் ஆட்சிக் கோலைப் பிடிப்பதற்குத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தள்ளப்பட்டேன். 'நெஞ்சுக்கு நீதி" முதல் பாகத்தை முடித்தபோது இறுதி அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன்: - "வெகுவேகமாகப் பல நிலையங்களில் நிற்காமலே ஓடி வந்த விரைவுப் புகைவண்டி கூட இடையில் ஒரு சந்திப்பில் களைப்பாற்றிக் கொள்ள நீரோ, நிலக்கரியோ, டீசலோ ஏற்றிக் கொள்ளச் சிறுபொழுது நின்று புறப்படுவது உண்டு! அப்படித்தான் கொஞ்சம் இடைவேளை எனக்கும் தேவைப்படுகிறது! சிறிது இளைப்பாறிய பின்னர் "நெஞ்சுக்கு நீதி"யின் நீடித்த பயணம் இரண்டாம் பாகமாகத் தொடர்ந்து நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன். ஒன்றை மட்டும் இங்கே நான் தெளிவாகப் பதிய வைப்பது என் கடமையாகும். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் அண்ணா அவர்களின் நினைவே எனக்கு ஊன்று கோலாய்த் துணைபுரிகிறது. அவருடைய இதயத்தை இரவலாகப் பெற்றுக் கொண்ட உணர்வோடுதான் நான் ஒவ்வொரு கணமும் நடைபோடுகிறேன். அப்போது நான் குறிப்பிட்டுள்ளபடி இனியிருப்பது நீடித்த பயணமோ, குறுகிய காலப் பயணமோ எனக்குத் தெரியாது! அதுபற்றிய கவலையுமில்லை! நடை தள்ளாடலாம் - தடைபடலாம் முடிவுற்றுப்போய் விடலாம் ஆ ஆனால் நான் பெற்றுள்ள அந்த உணர்வுகளுக்குத் தள்ளாட்டமில்லை! முடிவே இல்லை! இல்லவே இல்லை!