பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நெஞ்சுக்கு நீதி இதோ; "சங்கர்ஸ் வீக்லி" அன்று எழுதியதை அப்படியே தருகிறேன். "இன்று முதலமைச்சராகவும். திரு. அண்ணாதுரையின் வாரிசாகவும் திகழ்கின்ற கருணாநிதி நிதானத்தையும், உறுதியை யும் பெற்றுள்ளதோடன்றி, அரசியல் நுட்பங்களில் நல்ல தேர்ச்சியும், ஒரு நிபுணத் தன்மையையும் பெற்றிருக்கிறார். இவை அவரை அரசியல் அரங்கத்தில் நடுநாயகமானவராக ஆக்கியிருக்கிறது. பஞ்சாப்பைச் சேர்ந்த அகாலி தளத்துடன் ஏற்பட்ட கூட்டு திரு. கருணாநிதியுடைய ராஜ தந்திரத்தின் உச்ச கட்ட வெற்றிகளில் ஒன்றாகும். மாநிலங்களை அங்கங்களாகக் கொண்ட மத்திய ஆட்சி என்று அவர் அண்மையில் உருவாக்கியுள்ள புது சித்தாந்தம் அவருடைய பெரும் போர்த் தந்திரங்களில் ஒன்றாகும். இந்தியா முழுவதையும் நிர்வகிப்பதில் மாநிலக் கட்சிகளான தி. மு. க. தி.மு.க. அகாலி தளம் போன்ற கட்சிகளும் கூட இந்த சித்தாந்தத்தின் காரணமாக எடுத்த எடுப்பிலேயே முக்கியத்துவம் வாய்ந்த சக்திகளாகி விடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியதன் மூலம் இன்றை நிலவரத்தின் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்வதிலும், அதன் வாயிலாகத் தனக்கும், தன் கட்சிக்கும் உயர்ந்தபட்ச சாதகங் களைச் சேர்ப்பதிலும் திரு. கருணாநிதிக்குள்ள ஆற்றல் நன்கு வெளிப்படுகிறது. இந்தச் முறை சாத்தியமானதா இல்லையா என்பது வேறு. ஆனால் திரு. கருணாநிதி இதர பிராந்தியத் தலைவர்களுடன் சேர்ந்து; தாம் முதிர்ச்சி அடைந்து விட்டவர்தான் என்பதனை நிரூபித்து விட்டார். வட்ட செயல் யாரும் அவசியம் கருணாநிதியின் புதிய சித்தாந்தம் கண்டு மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய கிடையாது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஒரு ஸ்தாபன உருவம் கொடுப்பதற்குத்தான் கருணாநிதியின் சித்தாந்தம் முயற்சி செய்கிறது. இதனை எதிர்க்கும் தீவிரவாதிகளின் மூளை யற்ற முரட்டுத் தனத்தின் காரணமாகவேகூட இந்த நிலை என்றேனும் ஒருநாள் ஏற்படத்தான் போகிறது." இவ்வாறு அந்த இதழ்களில் வெளியிடப்பட்ட எண்ணங் கள்; இன்றைக்குச் செயல்வடிவம் கொண்டுள்ளன என்பதற்கும் பரவலாகத் துணைக்கண்டம் முழுவதும் மத்திய மாநில உறவு கள் பற்றிய புதிய சிந்தனை எழுந்துள்ளன என்பதற்கும்- பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாடும்,