பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மருத்துவமனையிலும் மறவாத மக்கள் பணி "திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் மத்திய அமைச்ச ராவதற்குக் குறுக்கே நந்தியாகவும் இருக்க மாட்டேன்-அதே சமயம் அவரைக் கோட்டைக்குக் கொண்டு செல்லும் குதிரை யாகவும் இருக்கமாட்டேன்” என் என்று 1970-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலின்போது நான் கூறியிருந்தாலும் கூட, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.கழகத்திற்கும். இந்திரா காங்கிரசுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குமிடையே அமைந்த தேர்தல் உடன்பாட்டின் காரணமாக அவர் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்கின்ற வாய்ப்பு உருவாயிற்று! ஆம்; கோட்டைக்கு அவரைத் தூக்கிச் சுமந்திட வேண்டிய குதிரையாக இருந்திட வேண்டியதாயிற்று. 1971- ஆம் ஆண்டு கோவையில் தி.மு.கழகத்தின் பொதுக்குழு நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 'சி. சுப்பிரமணியம் அவர்களுக்காக கரூர் பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற கே. கோபால் அவர்களும், கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தீர்த்த கிரி கவுண்டரும் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார்கள். இரண்டு தொகுதிகளில் எந்தத் தொகுதியில் சுப்பிரமணியம் அவர்களைப் போட்டியிடச் செய்யலாம்?" என்று பிரதமர் இந்திரா அவர்கள் என்னிடமே கருத்துக் கேட்டார். நான் தெரிவிக்கும் கருத்துக்கு ஏற்ப சி. எஸ். அவர்களுக்கு இடைத் தேர்தலுக் கான தொகுதியை அறிவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். பிறகு என் விருப்பப்படியே கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் திரு. சீ. எஸ். அவர்கள் இடைத்தேர்தலில் போட்டி யிட்டார். அவரை எதிர்த்துக் காமராஜர் தலைமையிலே இருந்த பழைய காங்கிரஸ் கட்சி போட்டியிடுமென எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் போட்டியிடவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் இரண்டொரு நாட்கள் சென்றிருந்தேன். அந்தப் பிரச்