பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல்வர் பத நெஞ்சுக்கு நீதி]7 2 மூன்று கடிதங்கள் இயக்கத் தலைவர்கள், முன்னோடிகள், தொண்டர்கள், மாற்றுக்கட்சி தோழமைக் கட்சியில் உள்ள முன்னணியினர் எனக்கு எழுதும் கடிதங்களை நான் திரும்பத் திரும்பப் படித்து அவற்றில் முக்கியமானவற்றையும் - கட்சிச் சார்பற்ற பெரியவர்கள் எழுதும் மடல்களையும் பல ஆண்டு காலமாகவே பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் உண்டு! பாசத்தை வெளிப்படுத்தும் கடிதங்களும் உண்டு! நேசத்தைப் பெருக்கும் கடிதங்களும் உண்டு! அறிவுரை பொழியும் கடிதங்களும் உண்டு! பதவியோ அல்லது உதவியோ நாடும் கடிதங்களும் உண்டு! அந்தக் கடிதங்களிலேயே நான் கண்போல் காத்துவரும் மூன்று கடிதங்களைக் குறிப்பிடுவதின் வாயிலாக மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் என்பால் கொண்டிருந்த நெருக்கத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அந்தக் கடிதங்கள் கழக வரலாற்றின் கட்டங்களை எப்படி உணர்த்துகின்றன என்பதே மிக முக்கியமாகும். அண்ணா விட்டுச் சென்ற மிகப்பெரும் பொறுப்பை என் தோளில் சுமந்து கொண்டபோது அந்தக் கடந்த கால நினைவுகள் வராமல் போகுமா? தி.மு.கழகம் பிறந்தது 1949-ஆம் ஆண்டு! அண்ணா மறைந்ததோ 1969-ஆம் ஆண்டு! கழகம் தோன்றிய மூன்றாம் ஆண்டு, 1952-ல் சென்னையில் கழகத்தின் மாநிலப் பொது மாநாடு எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றதல்லவா; அப்போது கழகத்தின் வலிவென்ன வசதிகள்