பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 251 கண் சிகிச்சை செய்து கொண்டது பற்றி பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தில், "அன்புள்ள திரு கருணாநிதி அவர்களுக்கு, தாங்கள் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு நான் கவலை கொண்டேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது என்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் விரைவிலேயே பூரண நலம் பெறுவீர்கள் என்றும், வழக்கமான பணிகளை தாங்கள் விரைவில் ஆற்றுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன்" என்று எழுதியிருந்தார்கள். கண்ணில் தொந்தரவு நீங்கி மே மாதம் 8-ந்தேதியன்று காலையில் வீடு திரும்பினேன். மருத்துவமனையில் இருந்த போது மின்சார வாரிய ஊழியர் களுக்கு உறுதி தந்ததற்கிணங்க மின்வாரிய ஊழியர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வுகளை அரசின் சார்பில் அறிவித்தேன். இதற்கிடையே தென் ரயில்வே டிரைவர்கள், பயர்மென் கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் வேலை நிறுத்தம் செய்ய உத்தேசித்திருந்த தகவலை அறிந்த மத்திய ரெயில்வே அமைச்சர் நந்தா அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு, ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தலை யிட்டு சமரசம் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இரு முறை பேச்சு வார்த்தை நடத்தியதற்குப் பிறகு வேலைக்குத் திரும்புவது என்று அவர்கள் முடிவெடுத்ததோடு, என்னை நேரிலும் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.