பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முதல் வெளிநாட்டுப் பயணம் ஒரு தவறு இன்னொரு தவறுக்குச் சமாதானமாகி விடாது என்று ஆன்றோர் கூறுவர்! 1971-ஆம் ஆண்டு வரையில் சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித்தலைவராக இருந்த கருத்திருமன் அவர்கள் விவாதங்களில் பேசும் போது மிகுந்த கடுமையான வார்த்தைகளைப் பயன் படுத்துவார் என்றாலும் பழகுவதற்கு இனியவராய்த் திகழ்ந்தார் நல்ல காங்கிரஸ்காரர். அண்ணா அவர்களிடத்தில் நிறைந்த அன்பு கொண்டவர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடை பெற்ற தவறுகளை ஆளுங் கட்சி சார்பில் யாராவது எடுத்துச் சொன்னால், உடனே ஆவேசமாக எழுந்து "அட, ஏனய்யா நாங்க செய்த தவறையே சொல்லிகிட்டு இருக்கீங்க? அதுக்குத் தான் நாங்க எதிர்வரிசையிலே உட்கார்ந்திருக்கோமே! எங்க தவறைச் சொன்னா உங்க தவறு மறைஞ்சிடுமா?" அழுத்தம் திருத்தமாகக் கேட்பார். என்று ஒரு நாள் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை அவையில் எழுப்பினார். கோவையில் ஒரு போலீஸ் அதிகாரி அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகக் குறைபட்டுக் கொண்ட அவர்; அந்த அதிகாரி அவரைப் பார்த்து, "நீங்கள் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்று எனக்கு எப்படித் தெரியும்?" 46 என்று கேட்டதாகக் குறிப்பிட்டுவிட்டு, 'அப்படியானால் முதலமைச்சர் யார் என்றுகூட எனக்கும் கேட்கத் தெரியும்!" என்று ஆத்திரத்துடன் கூறினார். உடனே அமைச்சர் ப. உ. சண்முகம் அவர்கள் எழுந்து, "உங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அண்ணாவையும், கலைஞரையும், நாவலரையும் நிறுத்தி வைத்து நீங்கள் யார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கேட்டதை நினைவூட்டுகிறேன்" என்றார்! 4 உடனே கருத்திருமன் அவர்கள் சினங் கொண்டு, "அப்படியானால் அதே பண்பாட்டில் நீங்களும் இறங்கியிருக் கிறீர்களா?" எனக் கேட்டார். அப்போது நான் குறுக்கிட்டேன். "மாண்புமிகு எதிர்க் கட்சித்தலைவர் கூறிய புகார் குறித்து நான் முன்பே கேள்விப் பட்டு அந்தப் போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கச்