பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 255 அந்தப் பயணத்திற்கு தமிழகத்தின் அறிவு ஒரு எளியவனின் இல்லை என்று கருதுகிறேன். ஆனால் என்னை வழியனுப்பி வைத்தபோது மேதைகள் சிலர் வழங்கிய கருத்துக்கள் வரலாற்று ஏட்டில் இடம் பெறாமல் போய்விடக் கூடாதே என்பதற்காக அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். சீரணியினர் சார்பில் நேரு கலையரங்கில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்னைக் கட்டித் தழுவி கட்டித் தழுவி அன்பு வாழ்த்துக்களை வழங்கினார்கள். அந்த விழாவில் அரசின் சார்பில் "தமிழரசு" என்ற இதழ் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த வழியனுப்பு விழாவில் பேசும் போது டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், "நம்முடைய முதலமைச்சர் அவர் கள் வெளி நாடு செல்வதறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெயரும், புகழும் பெற்றிருக்கிறார்கள். பிரச்சினைகள் வரும்போது அவை களைச் சாமர்த்தியத்துடனும், விடாமுயற்சியுடனும் தீர்க்கக் கூடியவர் நம்முடைய முதலமைச்சர். முதலமைச்சரின் சுற்றுப் பயணம் குறித்து சிலரால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை என் பதை அறிந்தேன். இன்றைய தினம் தமிழ்நாடு ஒரு சிறந்த நிர்வாகத்தைப் பெற்றிருக்கிறது. சட்டம், ஒழுங்கு மிகத் திறமையுடன் பாதுகாக்கப்படுகிறது தமிழ்நாட்டில். ஆகவே இந்தத் தமிழ்நாட்டின் நன்மைக்காகவும், தொடர்ந்து நல்ல வகையில் பணியாற்றுவதற்கான நிலைமையை உருவாக்கக் கூடிய வகையிலும், முதலமைச்சர் அவர்கள் தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார். அதே விழாவில் பேசிய மேலவை உறுப்பினர் பெரியவர் கே. பாலசுப்ரமணிய அய்யர் அவர்கள் "முதலமைச்சர் அவர் களின் மீதுள்ள அன்பின் காரணமாக இப்போது பேசுவதற்கு முன் வந்திருக்கிறேன். வயதில் பெரியவன் என்ற என்ற முறையில் அவரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் ஒரு நிலையான ஆட்சியைப் பெற்றிருக்கிறோம். பாக்கி மாநிலங்கள் எல்லாம் இன்றிருப்பார் நாளை இருப்பது திடமில்லை என்கிற அளவில்தான் இருக்கின்றன. உட்கார்ந்திருக்கும்