பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி265 அறிய சுற்றுக்கு விடவேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நான் “இச்சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டுமென்ற எண்ணத் தில் இந்த அரசு கொண்டுவரவில்லை. அதோடு பொதுமக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்சித் தலைவர்களின் கருத்துக் களையும் பத்திரிகைகளின் கருத்துக்களையும் அறிந்து அதற்கேற்ற படி திருத்தங்கள் செய்துதான் இந்த மசோதா கொண்டுவரப் பட்டுள்ளது" என விளக்கமளித்தேன். அதற்குப் பின்னர் சுதந்திரா கட்சியின் தலைவராக இருந்த சீமைச்சாமி அவர்கள் எழுந்து "முதல்வர் அளித்த சமாதானம் எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது என்று சொல்லத்தக்க அளவிற்கு முதல்வருக்கே உரிய சாமர்த்திய வாதத்தினால் விளக்கம் அளித்தார்கள். இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மன வேதனை கொண்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறி வெளிநடப்பு வெளிநடப்பு செய்தார்கள். நண்பர் ஹண்டே உள்ளிட்ட சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் அவரைப் பின்பற்றி வெளியேறினார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் 1970-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி நிலமீட்பு இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்ததை யொட்டி தமிழகத் திலும் நடத்தப் போவதாக அந்தக் கட்சியின் சார்பில் அறிவிக் கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையாகக் கைது செய்யப்பட்டது தஞ்சை மாவட்டத்தில்தான். அதுபற்றி திருச்சியில் நிருபர்கள் என்னைச் சந்தித்துக் கேட்ட போது "நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தரவேண்டும் என்ற கொள்கை கம்யூனிஸ்டுகளுக்கு மாத்திரமல்ல; எல்லா முற்போக்குக் கட்சிகளுக்கும் தி. மு. கழகத்திற்கும் உடன்பா டான கொள்கை. அதை நிறைவேற்றுவதற்கு சட்டப்படி தி.மு.க.ஆட்சி செயல்படுகிறது. எனினும் எந்தவிதமான கட்சிக் காழ்ப்பும் காட்டாமல் சட்டம் அமைதி காத்திட நடவடிக்கை எடுக்கும். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் கைது செய்யப்பட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்ட தற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. அதே உணர்ச் சியை அமைதியான முறையில் சட்டப் பூர்வமாகச் செயல்