பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 நெஞ்சுக்கு நீதி படுத்தத் தயாராக இருக்கிற இந்த அரசின் வேண்டுகோளை அவர்கள் ஏற்றிருந்தால் எவ்வளவோ நலமாக இருநீதிருக்கும். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகளில் பஞ்சாயத்து ஒன்றிய தேர்தலில் வேட்பாளர்களாகவோ வேட்பாளருக்கு ஒட்டளிக்க உரிமை உள்ளவர்களோ இருப்பார்களானால் அந்த உரிமையைச் செயல்படுத்த, அதாவது ஓட்டளிப்பதற்குச் செல்ல வேண்டு மென்று அவர்கள் கேட்பார்களானால் அவர்களை ஜாமீனில் விடுவது பற்றி யோசிக்கப்படும்" என்று கூறினேன். நில மீட்பு இயக்கத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த கம்யூ னிஸ்ட் கட்சியினரின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.கே. சுப்பையா அவர்கள் சட்டத்துறை அமைச்சராக இருந்த மாதவன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "எனது கட்சியும். மாநில விவசாயத் தொழிலாளர் சங்கமும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடத்திய நில மீட்பு இயக்கப் போராட்டம் முடிந்துவிட்டதால், மேற்கொண்டு இந்த இயக்கம் நடத்தப்பட மாட்டாது" என்று எழுதியிருந்தார். அவருடைய கடிதத்தின் அடிப்படையில் நில மீட்பு இயக் கத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வர்கள் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டப் பேரவையில் அறிவித்து விட்டு. அவர்களை எல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டேன். 1970-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21,22 ஆகிய நாட் களில் சென்னையில் கூடிய கழகத்தின் தலைமைச் செயற்குழு 'கட்சி அமைப்புக்களை மேலும் வலுப்படுத்தவும், கழகப் பிரச்சா ரத்தை விரிவுபடுத்தவும் அமைச்சரவையில் உள்ள கழக முன்னணியினரை ஈடுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் அமைச் சரவையைத் திருத்தி அமைக்க வேண்டுமென்று இந்தச் செயற் குழு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்! வழி மொழிந்து பேசியவர் நண்பர் மதுரை முத்து அவர்கள். செயற்குழுவில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முக்கியமான காரணம் அமைச்சர்களிடையே ஒழுங்கு, கட்டுப் பாடு கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான். முதலமைச்சர் பதவியிலே இருப்பவர்களுக்குத் தன்னுடைய அமைச்சரவையிலே இருப்பவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி இருக்கவேண்டும். அமைச்சர் எப்படிப்பட்ட தவறுகளைச்