பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மத்திய அரசில் எடுக்கப்படும் முற்போக்குத் திட்டங்களை ஆதரிப்பது என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தது. அந்த வரிசையில் 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் மன்னர்கள் அனைவருக்கும் அரசால் அளிக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை ரத்து செய்வது என்று என்று பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் முடிவெடுத்து அதற்கொப்ப 7-9-70 அன்று அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் வெளியிட்டார். இதனை டெல்லியில் தி. மு. கழகத்தின் சார்பில் நாடளு மன்ற தி.மு.க.குழு செயலாளராக இருந்த இரா. செழியன், எம்.பி. வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மன்னர் மானிய ஒழிப்பு மசோதா இதற்கு முன்பு மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு பாநிலங்களவையில் ஒரு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீரமானத்தை எதிர்த்து காமராஜர் நாடாளுமன்றத் தில் வாக்களித்தது தமிழக அரசியலில் அவருக்கு மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் 7-ந் தேதியன்று குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், அது தங்களுடைய ஜீவாதார உரிமைகளைப் பாதிப்பதாகவும் கூறி, குவாலியர், உதயபூர் நாபா, கட்ச், நலகார், பாட்னா, தாரங்கதாரா, காசி மன்னர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த உத்தரவிற்கு எதிராக பல்கிவாலாவும், உத்திரவிற்கு ஆதரவாக அட்டார்னி ஜெனரல் நிரேன் டேவும், மோகன் குமாரமங்கலமும் 21 நாள் வாதாடினார்கள். உச்ச நீதிமன்றத் தில் நடந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி இதயதுல்லா, நீதிபதி கள் ஷா, சிக்ரி, ஷிலாட், பார்கவா, மிட்டர், வைத்தியலிங்கம் குரோவர், ஹெக்டே, ரே, டுவா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் டிசம்பர் 15-ந் தேதியன்று தீர்ப்பு கூறப் பட்டது. "மன்னர்களுக்கு மானியமும் தனிச் சலுகைகளும்