பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி]9 அப்போது எவ்வளவு பெருந்தொகையாக இருந்திருக்கிறது! அதனால்தானே; "தம்பி உன்னிடமிருக்கும் ஆயிர ரூபாயையும் தேவராஜனிடம் கொடுத்து மோட்டார் காரை விரைவில் வாங்க ஏற்பாடு செய்” என்று அண்ணன் அன்றைக்கு எனக்கு மடல் அனுப்புகிறார். அந்தப் பணிகள் மட்டுமா - இயக்கத்தின் பல்வேறு பணிகளை அவர் என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவற்றை நான் நிறைவேற்றிட அவ்வப்போது வழங்கிய ஊக்கம் கொஞ்சமா? 1957-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தியாகி டாக்டர் சீனிவாசன் அவர்களை எதிர்த்து நின்று பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா வெற்றி பெற்றார். ஆனால் அதே காஞ்சித் தொகுதியில் 1962 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு பஸ் முதலாளியான காங்கிரஸ்காரரிடம் அண்ணா போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அண்ணாவின் ஆற்றல், அவரது பேச்சு, எழுத்து, அறிவுத்திறன், தமிழ் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கு கடல் கடந்து வாழும் அவற்றில் ஒரு தமிழர்களிடமும் அவருக்கிருந்த புகழ்ஒளி, கடுகளவுகூட இல்லாத ஒருவரிடம் அவர் தோற்க நேரிட்டபோது தமிழ் இனமே அழுதது! வெற்றி பெற்றுச் சட்டமன்றத்துக்கு வந்த அந்தக் காங்கிரஸ் பஸ் முதலாளி 1962 முதல் 1967 வரையில் ஒருநாள் கூட அவையில் பேசவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது! அதற்கு முன்பு ஐந்தாண்டு காலம் சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரைகள் பிரதிபலிப்பவைகளாகவும் பெருங்கடல்களாகவும் ஏழைகளின் தமிழ் அரசியல் மறைகளாகவும் - இதயத்தைப் உணர்வின் ஜனநாயக உரிமை முழக்கங்களாகவும் இனஎழுச்சி முரசங்களாகவும் அமைந்திருந்தன என்பதை நினைக்கும்போது அந்த அரசியல் உலகின் எல்லாப் வித்தகரை, இலக்கிய பேரறிவாளரை, பகுதிகளிலும் சிதறிக் கிடக்கிற தமிழ் சாதி மக்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை காஞ்சிபுரம் தொகுதி வாக்காளர்கள் எப்படித்தான் தோற்கடித்தனரோ என வியப்படைவதும் வேதனைப்படுவதும் இயற்கையேயன்றோ!