பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276. நெஞ்சுத்து நீதி 276.ந வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்வதோடு, அவ்வாறு ஆனைவருமே நடந்து கொள்ளவேண்டும் என்ற பணிவன்பான வேண்டுகோளையும் விடுத்திடுவது என் கடமை என்று கருது கிறேன். இந்த மகத்தான சோதனையில் எல்லாக் கட்சிக்காரர் களும், தமிழ்நாட்டின் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தை யும், அமைதியான சூழ்நிலையையும் பேணிக் காத்தனர் என்பது தான் நாம் ஏற்றி வைக்கும் அணையாத விளக்காகும்; எழுதி வைக்கும் அற்புத சரித்திரமாகும். அமைதி வழி தேர்தல் நடை பெற - அறவழிகள் கடைப் பிடிக்கப்பட-கொடும்பகை உணர்வு ஒழிந்து-கொள்கைப் பற்றுணர்வே மிகுந்து-கட்சிகள் வேறு வேறு இருக்கலாம்; ஆனால் கருத்தொருமித்த நட்பு வளர்ந்திட வேண்டும் என்ற துளுரையை அனைவரும் எடுத்துக் கொண்டு தேர்தலில் ஈடுபடுவோம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு- அதற்குக் கட்டுப்படுவோம்" என்று கேட்டுக் கொண்டேன். தி.மு. கழகத்திற்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், இன்னும் ஓராண்டுகள் ஆட்சியில் இருக்கலாம் என்றபோதிலும் இந்தியாவிலேயே தைரியமாக முதன்முதலில் முன்வந்து சட்ட மன்றத்தைக் கலைத்த கட்சி அப்போது திராவிட முன்னேற்றக் கழகம்தான். ஆனால், அதுபற்றி "இந்து" எழுதிய தலையங்கத்தில் ஒவ்வொரு நாளும் தி.மு. கழகத்தின் பிரகாசம் குறைந்து வருவ சட்டசபை கலைக்கப்பட்டதாகவும் தாகவும், அதனால் தான் எழுதியது. ஆ