பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நெஞ்சுக்கு நீதி விட்டுவிட்டது என்று அவர் பதில் அளித்தார். சேலத்தில் திராவிடர் கழகத்தினர் கடவுளர் சிலைகளைக் களங்கப்படுத்தியது: குறித்துக் கேட்டபோது இந்திரா காந்தி அவர்கள்; திராவிடர் கழகத்திற்கும் தி. மு. கழகத்திற்கும் கடவுள் குறித்த கொள்கை யில் நடைமுறை வேறுபாடுகள் உண்டு என்றும், திராவிடர் கழகம் ஒரு அரசியல் கட்சி அல்ல என்றும் விளக்கமளித்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தி. மு. கழகத்தின் கொள்கையென்பதும் அன்றைக்கு இந்திரா காங்கிரஸ்காரர் களாலேயே எடுத்துக் கூறப்பட்டது. வடக்கே இந்திரா காந்தியையும், தமிழகத்தில் கருணாநிதி யையும், வீழ்த்துவதே தங்களது நோக்கமென்று பழைய காங்கிர சார் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்தனர். சுமார் முப்பது நாட்கள் வேனிலேயே தமிழக முழுதும் சென்று இரவு பகல் பாராது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் ஒரு பகுதியில் எம். ஜி. ஆர். அவர்கள் நீண்ட சுற்றுப்பயணத் திட்டம் வகுத்துக்கொண்டு வேன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். விடியற்காலை ஐந்து அல்லது ஐந்தரை மணி அளவில் எங்காவது ஒரு இடத்தில் இறங்கிக் குளிப்பது - பிறகு ஏழு மணிக்கெல்லாம் மீண்டும் வேனில் ஏறிப் புறப்படுவது! வழியில் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு, அதற்குள்ளேயே அமர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம் பொட்டலங்களைக்கு கொண்டுவரச் செய்து சாப்பிடுவது! ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு வேன் செல்லும்பொழுது கிடைக்கும் சொற்ப இடை நோத்தில் ஒரு மின்னல் உறக்கம் கொள்வது! இப்படி முப்பது நாட்கள் - கண்கள் வீங்கிவிட்டன! கன்னங்கரேலென ஆகி விட்டது உடல் முழுதும்! நாற்பத்தேழு வயது அப்போது- அதனால் தாங்கிக் கொண்டது உடல்! காமராஜர், நிஜலிங்கப்பா, ராஜாஜி, மொரார்ஜி போன்ற மிகப் பெருந்தலைவர்களின் கூட்டணிதான் வெற்றி பெரு மென்றும் - மத்தியில் இந்திராவின் தோல்வியும், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தோல்வியும் தோல்வியும் உறுதியென்றும் பத்திரிகைகள் யூகங்களை வெளியிட்டன. தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்கள் பலபேர், தங்களை மந்திரிகள் எனக் கருதிக்கொண்டு அதற் கேற்ற உடைகளைத் தைப்பதற்கு அளவுகள் கொடுத்து விட்டனர். C சிலர், மூக்குக் கண்ணாடிகளைச் சரி செய்து கொண்டனர், 'பைல்'களைப் பார்ப்பதற்காக! "மார்ச் 10-ஆம் தேதிக்குப் .